Home
Mobile

போக்கோ அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. 100W சார்ஜிங்.. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எக்ஸ்8எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஸ்னாப்டிராகன் சிப்செட், 100W சார்ஜிங், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. இப்போது போக்கோ எக்ஸ்8எஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

போக்கோ எக்ஸ்8எஸ் அம்சங்கள் (Poco X8s Specifications): 6.35-இன்ச் 1.5கே எல்டிபிஒ ஒஎல்இடி டிஸ்பிளே உடன் புதிய போக்கோ எக்ஸ்8எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

போக்கோ அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

தரமான ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் (Snapdragon 7 Gen 4 chipset) உடன் போக்கோ எக்ஸ்8எஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்பளை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் போக்கோ எக்ஸ்8எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் போக்கோ எக்ஸ்8எஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் போக்கோ எக்ஸ்8எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த புதிய போக்கோ போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.

6330எம்ஏஎச் பேட்டரி உடன் போக்கோ எக்ஸ்8எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் போக்கோ எக்ஸ்8எஸ் வெளியாகி உள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் எடை 187 கிராம் ஆகும்.

5ஜி, வைஃபை 7, புளூடூத் 5.4இ என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போக்கோ போனில் உள்ளன. வெள்ளை, கருப்பு மற்றும் நீலம் ஆகிய நிறஙகளில் இந்த புதிய போக்கோ போனை வாங்க முடியும்.

தற்போது போக்கோ எக்ஸ்8எஸ் ஸ்மார்ட்போன் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். மேலும் இந்த போனின் ஆரம்ப விலை VND 11,500,000 (இந்திய மதிப்பில் ரூ.42107)-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Poco X8s launched in Vietnam: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X