Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. 6500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா.. POCO 5G ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பெரிய பேட்டரி மற்றும் அதிக ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. இதில் பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாகவும் களமிறங்கிய போகோ எக்ஸ்8 ப்ரோ (POCO X8 Pro) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. விற்பனையில் பட்டையை கிளப்புகிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 31 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.34,999 விலைக்கு 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.31,999 விலைக்கு இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. 6500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா!

போகோ எக்ஸ்8 ப்ரோ அம்சங்கள் (POCO X8 Pro Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்ட 6.59 இன்ச் (2756 x 1268 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) கிடைக்கிறது. ஓடிடி பிரியர்கள் விரும்பும்படி டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8500 Ultra 4nm) சிப்செட் வருகிறது.

4 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3) மற்றும் ஆர்ம் மாலி ஜி720 எம்சி8 ஜிபியு (Arm Mail G720 MC8 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. 3டி ஐஸ்-லூப் கூலிங் சிஸ்டம் (3D ice-loop Cooling System) கொடுத்துள்ளது.

மேலும், 5300 எம்எம் விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கொண்ட மாடலாகவும் இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ இருக்கிறது. 50 எம்பி கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ இருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) கிடைக்கிறது. 20 எம்பி செல்பீ கேமராவை இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த பேட்டரியுடன் 8.38 எம்எம் தடிமன் வருகிறது.

மேலும், 201.47 கிராம் எடை வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) உள்ளது. இதுபோக இன்பிராரெட் சென்சார் ( Infrared Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனை பிளாக் (Black), ஒயிட் (White) மற்றும கிரீன் (Green) கலரில் வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
POCO X8 Pro With 8GB RAM Available At 31 Percent Discount on Flipkart Check Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X