Home
Mobile

பேக் டூ பேக் சிக்ஸர் அடிக்கும் POCO.. இன்னொரு புது போன்.. 6500mAh பேட்டரி, 100W சார்ஜிங்!

ஏற்கனவே போக்கோ (POCO) நிறுவனம் அதன் போக்கோ எப்8 சீரீஸின் கீழ் போக்கோ எப்8 ப்ரோ மற்றும் போக்கோ எப்8 அல்ட்ரா ஆகிய 2 மாடல்களை உலகளவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இது வருகிற நவம்பர் 26 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இதற்கிடையில் போக்கோ நிறுவனம் அதன் எக்ஸ் சீரீஸின் கீழும் புதிய ஸ்மார்ட்போன்களை கூடிய விரைவில் அறிமுகம் செய்யலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது. அது போக்கோ எக்ஸ்8 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இந்த தகவலை உறுதிப்படுத்தும்படியாக போக்கோ எக்ஸ்8 ப்ரோ (POCO X8 Pro) ஸ்மார்ட்போனின் பேட்டரி மற்றும் சார்ஜிங் குறித்த விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

பேக் டூ பேக் சிக்ஸர் அடிக்கும் POCO..இன்னொரு புது போன்!

என்னென்ன அம்சங்கள்? எஸ்ஜிஸ் சான்றிதழ் பதிவுகளின்படி இது 6500mAh பேட்டரி மற்றும் 100W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கலாம். கடந்த கால அறிக்கைகள் போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இன்னும் வெளியிடப்படாத ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5) ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம் என்று பரிந்துரைக்கின்றன.

அதாவது சீனாவில் ரெட்மி டர்போ 5 ஆகவும், இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஆகவும் அறிமுகம் செய்யப்படலாம். ஆக சீனாவிற்கு மட்டுமே பிரத்யேகமான ஸ்மார்ட்போனாக இருக்கும் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் லீக்டு அம்சங்கள் போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனில் இடம்பெறலாம்.

ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை இது 6.67-இன்ச் பிளாட் OLED LTPS 1.5கே டிஸ்பிளே, ஒரு மெட்டல் மிடில் ஃபிரேம், டைமன்சிட்டி 8500 அல்ட்ரா (இனிமேல் தான் அறிமுகம் செய்யப்படவுள்ளது) மற்றும் 7000mAh பேட்டரி ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.

எப்போது அறிமுகம்? ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை பொறுத்தவரை இது அடுத்த மாதம் (2025 டிசம்பர்) சீனாவில் அறிமுகப்படுத்தப்படலாம். அதனை தொடர்ந்து இது போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனாக அடுத்த 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியா மற்றும் உலகளவில் அறிமுகப்படுத்தப்படலாம்.

என்ன விலை? இந்தியாவில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.40,000 - ரூ.45,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போக்கோ எக்ஸ்7 ப்ரோ மாடலுடன் ஒப்பிடும் போது "மிகப்பெரிய விலை அதிகரிப்பு" ஆகும். நினைவூட்டும் வண்ணம் போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.26,999 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது

போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 3200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ உடனான 6.73-இன்ச் 1.5கே பிளாட் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்ட்ரா சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது LPDDR5X ரேம் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜிற்கான ஆதரவை கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை 50 மெகாபிக்சல் சோனி LYT-600 ப்ரைமரி சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர் உள்ளது.

முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. போக்கோ எக்ஸ்7 ப்ரோ மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஆகிய 2 மாடல்களுக்கும் உண்மையிலேயே மிகப்பெரிய விலை வேறுபாடு இருந்தால் புதிய மாடலில் பல லேட்டஸ்ட் அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco X8 Pro With 6500mAh Battery 100W Fast Charging Launching Soon Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X