POCO போட்டான் பாரு.. ரூ.3,000 டிஸ்கவுண்ட்.. 6500mAh பேட்டரி.. 100W பாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
100W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 6500mAh பேட்டரி, சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் வெளியான போகோ எக்ஸ்8 ப்ரோ (POCO X8 Pro) ஸ்மார்ட்போனின் விற்பனையானது, தள்ளுபடியுடன் தொடங்கிவிட்டது. இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் முதலாவது மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட் கொண்ட மாடலாக போகோ எக்ஸ்8 ப்ரோ இருக்கிறது. பிரீமியம் டியூரபிலிட்டி கொடுக்கும்படி அலுமினியம் மிடில் ஃபிரேம் மட்டுமல்லாமல், IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) கிடைக்கிறது.

3டி ஐஸ்-லூப் கூலிங் சிஸ்டம் (3D ice-loop Cooling System), 5300 எம்எம் விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கொண்டுள்ளது. 4 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்டுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்து உள்ளது. இப்போது, ரூ.3,000 பேங்க் தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்கிறது.
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.32,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,999 ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.3,000 பேங்க் தள்ளுபடி போக ரூ.29,999 ஆரம்ப விலைக்கு கிடைக்கிறது. பிளாக் (Black), ஒயிட் (White) மற்றும கிரீன் (Green) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது.
போகோ எக்ஸ்8 ப்ரோ அம்சங்கள் (POCO X8 Pro Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8500 Ultra 4nm) சிப்செட்டை இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3) கொடுக்கப்பட்டு உள்ளது. 6.59 இன்ச் (2756 x 1268 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது.
1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொடுத்து உள்ளது. டால்பி விஷன் மற்றும் டிசி டிம்மிங் கிடைக்கிறது. 3840Hz ரேட்டிங் PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. ஐஎம்எக்ஸ்882 (IMX882) சென்சாருடன் 50 எம்பி கேமரா கிடைக்கிறது.
மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு 20 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 1080p ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.
100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பெரிய பேட்டரியை கொடுக்கிறது. 8.38 எம்எம் தடிமன் மற்றும் 201.47 கிராம் எடை கொடுத்து உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் ( Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடலாகும்.


Click it and Unblock the Notifications








