Home
Mobile

மார்க்கெட்டே மிரள போகுது.. 8000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. வருகிறது புது Poco போன்.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எக்ஸ்8 ப்ரோ (Poco X8 Pro) ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய போக்கோ போன் தற்போது BIS சான்றிதழ் தளத்தில் 2511FPC34I என்ற மாடல் நம்பர் காணப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் ஆனது அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும். இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த புதிய போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மார்க்கெட்டே மிரள போகுது.. 8000mAh பேட்டரி.. வருகிறது புது Poco போன்..

போக்கோ எக்ஸ்8 ப்ரோ அம்சங்கள் (Poco X8 Pro specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 8500 எஸ்ஒசி (MediaTek Dimensity 8500 SoC) சிப்செட் உடன் இந்த புதிய போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். அதுவும் இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

6.67-இன்ச் அமோலெட் எல்டிபிஎஸ் (AMOLED LTPS) டிஸ்பிளே உடன் இந்த போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த புதிய போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த புதிய போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் இந்த போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த போக்கோ போனில் உள்ளது.

8000mAh பேட்டரி உடன் போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.30.000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco X8 Pro Spotted on BIS Certification: May Launch Soon: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X