போட்டான் பாரு POCO.. 8500mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?
போகோ நிறுவனத்தின் போகோ எக்ஸ்8 ப்ரோ சீரிஸ் (POCO X8 Pro Series) மாடல்களின் முழு பீச்சர்கள் கசிந்துள்ளன. கூடவே, இந்திய வெளியீடு குறித்த விவரங்களும் கசிந்துள்ளது. இதனால், போகோ பிரியர்கள் வெயிட்டிங் மோடுக்கு சென்றுவிட்டனர். இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ சீரிஸ் மாடல்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் போகோ எக்ஸ்8 ப்ரோ (POCO X8 Pro), போகோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (POCO X8 Pro Max) ஆகிய மாடல்கள் வருகிற மார்ச் மாதத்தில் வெளியாகும் என்று டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்த பீச்சர்களும் அதில் கசிந்துள்ளது. இந்த பீச்சர்கள் பெரிய பேட்டரி கேட்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களை வெயிட்டிங் செய்ய வைத்துள்ளது.

போகோ எக்ஸ்8 ப்ரோ அம்சங்கள் (POCO X8 Pro Specifications): 6.59 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் எச்பிஎம் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா (Octa Core MediaTek Dimensity 8500 Ultra) சிப்செட் மற்றும் மாலி ஜி720 எம்சி8 ஜிபியு (Mali-G720 MC8) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஹைப்பர்ஓஎஸ் 3 (HyperOS 3) கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் மற்றும ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 20 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இதில் ஓம்னிவிஷன் ஓவி20பி (OV20B) சென்சார் கிடைக்கிறது.
100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 27W ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) கொடுக்கப்பட்டு உள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கொண்டுள்ளது. IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) உள்ளது.
போகோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (POCO X8 Pro Max Specifications): 6.83 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் எச்பிஎம் மோட் கிடைக்கிறது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைத்துள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் (Octa Core MediaTek Dimensity 9500s) சிப்செட் உள்ளது.
இம்மார்டலிஸ் ஜி925 எம்சி12 ஜிபியு ( Immortalis-G925 MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஹைப்பர்ஓஎஸ் 3 (HyperOS 3) வருகிறது. 50 எம்பி மெயின் கேமராவில் லைட் ஹண்டர் 600 (Light Hunter 600) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுத்துள்ளது.
20 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இதில் ஓவி20பி (OV20B) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. 8500mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 27W ரிவர்ஸ் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. 8.15 எம்எம் தடிமன் மற்றும் 219 கிராம் எடை உள்ளது. 3டி அல்ட்ராசோனிக் பிங்கர்பிரிண்ட் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. மற்ற பீச்சர்கள் முந்தைய மாடலை போலவே உள்ளது.


Click it and Unblock the Notifications