Home
Mobile

POCO பொளந்துட்டான் போங்க.. 2 நாள் சார்ஜ் தாங்கும் 8500mAh பேட்டரி உடன் புது போன்!

போக்கோ (POCO) நிறுவனம், அதன் மிகவும் பிரபலமான எக்ஸ் சீரீஸின் கீழ் உடனடியாக 2 ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. அது போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் (POCO X8 Pro Series) மாடல்கள் ஆகும்.

போக்கோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்8 ப்ரோ சீரிஸின் கீழ் போக்கோ எக்ஸ்8 ப்ரோ (POCO X8 Pro) மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (POCO X8 Pro Max) என்கிற 2 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 நாள் சார்ஜ் தாங்கும் 8500mAh பேட்டரி உடன் புது POCO போன்!

சீனாவில் அறிமுகமான ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இந்தியா மற்றும் இதர சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மாடல் ஆனது தென் கொரியாவின் ஆர்ஆர்ஏ (RRA) சான்றிதழ் தரவுத்தளத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது. இது குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் உடனடி வருகையை குறிக்கிறது.

போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது, அடுத்த மாதம், அதாவது வருகிற 2026 மார்ச் மாதத்தில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் மாடலுடன் சேர்ந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று வதந்திகள் பரவியுள்ளது. மேலும் போக்கோ நிறுவனம் போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனின் அயர்ன் மேன் (Iron Man) எடிஷனையும் அறிமுகப்படுத்தலாம்.

சமீபத்தில் ஐரோப்பிய நாட்டில் உள்ள ஷாவ்மீ ஆன்லைன் ஸ்டோரில் இவ்விரு ஸ்மார்ட்போன்களின் (போக்கோ எக்ஸ்8 ப்ரோ மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ்) விலை, கலர் ஆப்ஷன்கள் மற்றும் ஸ்டோரேஜ் குறித்த விவரங்கள் வெளியாகியதும் இங்கே குறிப்பிடத்தக்கது அதன்படி ஐரோப்பாவில், 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷனில் வரும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் இல்லை இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.57,000 ஆகும்.

அதே நேரத்தில், 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் உடன் வரும் வேரியண்ட்டின் விலை தோராயமாக ரூ.62,000 ஆகும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனை பொறுத்தவரை பேஸிக் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ், 8GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் ஆகிய ஆப்ஷன்களில் வரும், இவற்றின் விலைகள் முறையே, தோராயமாக ரூ.43,000, ரூ.48,000) மற்றும் ரூ.51,000 ஆக நிர்ணயம் செய்யப்படும்.

போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சீனாவில் - ரெட்மி டர்போ 5 மேக்ஸ் (Redmi Turbo 5 Max) ஸ்மார்ட்போன் ஆனது 9000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போன் - இந்திய சந்தையில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (Poco X8 Pro Max) ஆக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சமீபத்திய அப்டேட் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 8500mAh பேட்டரி உடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிறது. பேட்டரி கெப்பாசிட்டியில் உள்ள இந்த சிறிய தரமிறக்கம் ஆனது பிராந்திய பாதுகாப்பு மற்றும் சான்றிதழ் தேவைகள் காரணமாக இருக்கலாம். இருப்பினும் கூட மற்ற பெரும்பாலான ஸ்மார்ட்போன்களுடன் ப்பிடும்போது - கண்டிப்பாக இது முன்னணியில் இருக்கும்.

பேப்பர்கிங்13 (PaperKing13) வழியாக கிடைத்துள்ள இந்த தகவலில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 8500mAh பேட்டரி ஆனது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் இணைக்கப்படும் என்றும் குறிப்பிடுகிறது. ஆக இவ்வளவு பெரிய பேட்டரியுடன், ஒரு முழு சார்ஜில் - போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது எளிமையாக 2 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO X8 Pro POCO X8 Pro Max Tipped Again to Launch Soon Expected Timeline Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X