Home
Mobile

மார்ச் 17 சம்பவம் உறுதி.. 9000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கும் போகோ எக்ஸ்8 ப்ரோ (POCO X8 Pro) மற்றும் போகோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (POCO X8 Pro Max) ஆகிய ஸ்மார்ட்போன்களின் கேமரா மற்றும் டிஸ்பிளே பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப டிஸ்பிளே மற்றும் கேமரா பிரியர்களுக்கு ஏற்ப டூயல் ரியர் சிஸ்டம் கிடைக்க இருப்பது தெரிகிறது.

மார்ச் 17ஆம் தேதி குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் போகோ எக்ஸ்8 ப்ரோ மற்றும் போகோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதனால், அந்த மாடல்களின் பீச்சர்கள், விலை விவரங்கள் வெளியாகி வருகின்றன. சிப்செட், பேட்டரி உள்ளிட்ட பீச்சர்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. அதேபோல விலை விவரங்களும் கசிந்துவிட்டன.

மார்ச் 17 சம்பவம் உறுதி.. 9000mAh பேட்டரி.. 100W சார்ஜ்.. 50MP கேமரா!

இந்த நேரத்தில் கேமரா மற்றும் டிஸ்பிளே பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன. வழக்கம்போல டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்ட மாடல்களாக இருப்பது தெரிகிறது. போகோ எக்ஸ்8 ப்ரோ மற்றும் எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது. பில்-ஷேப்டு கேமரா டிசைனை பார்க்க முடிகிறது. அல்ட்ரா வைடு கேமராவை எதிர்பார்க்கலாம்.

போகோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க உள்ளது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. போகோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்க உள்ளது.

ஆகவே, இதை காம்பாக்ட் மாடலாக எதிர்பார்க்கலாம். மற்றபடி அதே 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட டிஸ்பிளே பீச்சர்களை கொண்டுள்ளது. முன்னதாக உறுதி செய்யப்பட்ட பீச்சர்களை பார்க்கையில், IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கிடைக்க உள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா (Octa Core MediaTek Dimensity 8500 Ultra) சிப்செட்டை போகோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுக்க உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் (Octa Core MediaTek Dimensity 9500s) சிப்செட்டை போகோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது.

மேலும், 9000mAh பேட்டரி கொண்ட மாடலாக போகோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் வெளியாக இருக்கிறது. போகோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6,500mAh பேட்டரி வர உள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் இந்த மாடல்களில் கிடைக்க உள்ளது. போகோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் மாடலில் 27W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க உள்ளது. இப்போது, விலை விவரங்களை பார்க்கலாம்.

டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் அவரது எக்ஸ் தளத்தில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ விலை ரூ.35,000 பட்ஜெட்டிலும், போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.42,000 பட்ஜெட்டிலும் இருக்கும் என்பதை குறிப்பிட்டு உள்ளார். ஆகவே, மிட்-ரேஞ்ச் செக்மெண்ட்டில் வெளியாக இருப்பது தெரிகிறது. நாளை முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் தெரிய வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO X8 Pro POCO X8 Pro Max Camera Display Features Revealed Ahead Of India Launch on March 17
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X