Home
Mobile

இப்படி இருக்கனும் டிஸ்கவுண்ட்.. 9000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா.. POCO ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் 9000mAh பேட்டரியுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கும் கிடைத்தால் சொல்லவா வேண்டும், அப்படிப்பட்ட போகோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (POCO X8 Pro Max) ஸ்மார்ட்போன் இப்போது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 12 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.44,999 விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.41,999 விலைக்கு இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

இப்படி இருக்கனும் டிஸ்கவுண்ட்.. 9000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்!

போகோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (POCO X8 Pro Max Specifications): 6.83 இன்ச் (2772 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்ட மாடலாக இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் இருக்கிறது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2560Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த டிஸ்பிளேவுக்கு டிசி டிம்மிங் கிடைக்கிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் 3என்எம் (Octa Core MediaTek Dimensity 9500s 3nm) சிப்செட்டை கொடுத்துள்ளது.

மேலும், ஆர்ம் மாலி ஜி95 எம்சி12 ஜிபியு (Arm Mali G925 MC12 GPU) கிராபிக்ஸ் கார்டை பேக் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்து இருக்கிறது.

3டி ஐஸ்-லூப் கூலிங் சிஸ்டம் (3D ice-loop Cooling System) மற்றும் 5800 எம்எம் விசி கூலிங் (VC Cooling) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9000mAh பேட்டரி கிடைக்கிறது. 100W பிபிஎஸ் சார்ஜிங் ப்ரோட்டோகால் (PPS Charging Protocol) கிடைக்கிறது.

மேலும், 27W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. லைட் ப்யூசன் 600 (Light Fusion 600), ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) டெக்னாலஜிகளை இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

ஓம்னிவிஷன் ஓவி20பி (OV20B) சென்சார் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 20 எம்பி செல்பீ கேமராவை இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display 3D Ultrasonic Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

யூஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டு உள்ளன. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர்ப்ரூப் கிடைக்கிறது. பிளாக் (Black), ஒயிட் (White) மற்றும் ப்ளூ (Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
POCO X8 Pro Max With 12GB RAM Available At 12 Percent Discount on Flipkart Check Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X