அடுத்த போக்கோ 5ஜி போன் ரெடி.. 8500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. 16ஜிபி ரேம்.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனம் அடுத்து போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்தோனேசிய TKDN சான்றிதழ் இந்த போன் காணப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த போன் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (Poco X8 Pro Max Specifications): 6.83-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1280 x 2772 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் (MediaTek Dimensity 9500s) சிப்செட் உடன் புதிய போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் மாடல் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியுடன் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகள் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.
8500எம்ஏஎச் பேட்டரி உடன் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய போக்கோ போன் வெளிவரும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போக்கோ போன் சற்று உயர்வான விலையில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications








