Home
Mobile

பொறுங்க.. வேற போன் வாங்கிடாதீங்க.. POCO-வின் 2 முரட்டு போன் அறிமுகம் ஆக போகுது.. என்ன மாடல்கள்?

போக்கோ (Poco) நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான எக்ஸ் சீரீஸின் கீழ் 2 புதிய ஸ்மார்ட்போன்களை, கூடிய விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. அது போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் (Poco X8 Pro Series) ஆகும். இதன்கீழ் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் என்கிற 2 மாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனேவே இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள பல சான்றிதழ் வலைத்தளங்களில் இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே காணப்பட்டுள்ளன. இது - இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தக்கூடும் என்பதை குறிக்கிறது. இதற்கிடையில் ஐரோப்பிய நாட்டில் உள்ள ஷாவ்மீ ஆன்லைன் ஸ்டோரில் இவ்விரு ஸ்மார்ட்போன்களின் விலை, கலர் ஆப்ஷன்கள் மற்றும் ஸ்டோரேஜ் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

POCO-வின் 2 முரட்டு போன் அறிமுகம் ஆக போகுது.. என்ன மாடல்கள்?

அதன்படி ஐரோப்பாவில், 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷனில் வரும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் இல்லை இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.57,000 ஆகும். அதே நேரத்தில், 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் உடன் வரும் வேரியண்ட்டின் விலை தோராயமாக ரூ.62,000 ஆகும்

போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனை பொறுத்தவரை பேஸிக் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ், 8GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் ஆகிய ஆப்ஷன்களில் வரும், இவற்றின் விலைகள் முறையே (இந்திய ரூபாய் மதிப்பின்படி) தோராயமாக ரூ.43,000, ரூ.48,000) மற்றும் ரூ.51,000 ஆக நிர்ணயம் செய்யப்படும்.

என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சீனாவில் - ரெட்மி டர்போ 5 மேக்ஸ் (Redmi Turbo 5 Max) ஸ்மார்ட்போன் ஆனது 9000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போன் - இந்திய சந்தையில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (Poco X8 Pro Max) ஆக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சமீபத்திய அப்டேட் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 8500mAh பேட்டரி உடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிறது. பேட்டரி கெப்பாசிட்டியில் உள்ள இந்த சிறிய தரமிறக்கம் ஆனது பிராந்திய பாதுகாப்பு மற்றும் சான்றிதழ் தேவைகள் காரணமாக இருக்கலாம். இருப்பினும் கூட மற்ற பெரும்பாலான ஸ்மார்ட்போன்களுடன் ப்பிடும்போது - கண்டிப்பாக இது முன்னணியில் இருக்கும்.

பேப்பர்கிங்13 (PaperKing13) வழியாக கிடைத்துள்ள இந்த தகவலில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 8500mAh பேட்டரி ஆனது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் இணைக்கப்படும் என்றும் குறிப்பிடுகிறது. ஆக இவ்வளவு பெரிய பேட்டரியுடன், ஒரு முழு சார்ஜில் - போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது எளிமையாக 2 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்கலாம்.

முன்னதாக அறிமுகமான போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 3200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ உடனான 6.73-இன்ச் 1.5கே பிளாட் AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்ட்ரா சிப்செட்
- LPDDR5X ரேம் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜ்

- 50 மெகாபிக்சல் சோனி LYT-600 ப்ரைமரி சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 20எம்பி செல்பீ கேமரா
- 90W ஹைப்பர்சார்ஜ் ஆதரவு
- 6,550mAh பேட்டரி
- நிறுவனத்தின் கூற்றுப்படி இது 47 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் சார்ஜ் செய்யும்

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco X8 Pro Max and Poco X8 Pro Price Details Leaked India Launch Expected Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X