Home
Mobile

இது POCO புரட்சி.. 9000mAh பேட்டரி, 100W சார்ஜிங், IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட் உடன் புது 5ஜி போன்!

போக்கோ (POCO) நிறுவனத்திற்கு இந்தியா - ஒரு முக்கியமான சந்தை ஆகும். இதை போக்கோ நிறுவனமும் நன்கு அறியும். நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போட்டிகளில் சிக்கி போக்கோ நிறுவனமானது மற்ற நிறுவனங்களின் "பிக் பேட்டரி" ஸ்மார்ட்போன்களிடம் தோற்றுப்போக விரும்பவில்லை என்பது போல் தெரிகிறது.

ஆகையால் தான் இந்நிறுவனம் 9000mAh பேட்டரி கொண்ட மாடலை இறக்கி சந்தையில் ஏற்கனவே உள்ள 7000mAh பேட்டரிகளை கொண்டுள்ள போன்களை ஓடவிட திட்டமிட்டுள்ளது. அந்த மாடல் போக்கோ எக்ஸ்8 ப்ரோ (POCO X8 Pro) ஸ்மார்ட்போனாக இருக்கலாம். இது போக்கோ எக்ஸ்8 சீரிஸின் கீழ் இந்தியா உட்பட பல சந்தைகளில் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படும் தருவாயில் இருப்பதாக வதந்திகள் தெரிவிக்கின்றன.

இது POCO புரட்சி.. 9000mAh பேட்டரி, 100W சார்ஜிங், IP69!

போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் அறிமுகமாகும் ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் (மறுபெயரிடப்பட்ட) வெர்ஷன் ஆக இருக்கலாம் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதாவது ஒரே அம்சங்களுடன் வெவ்வேறு சந்தைகளில் இருவேறு பெயர்களின் கீழ் அறிமுகமாகும்.

ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது ஜனவரி 2026 தொடக்கத்திலோ சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் உலகளாவிய சந்தைகளில் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக - போக்கோ எக்ஸ்8 ப்ரோவாக அறிமுகம் செய்யப்படலாம்

ரெட்மி டர்போ 5 / போக்கோ எக்ஸ்8 ப்ரோ - என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 1.5K ரெசல்யூஷன் LTPS OLED டிஸ்பிளே
- 100W சார்ஜிங் ஆதரவுடன் 8,000mAh அல்லது 9,000mAh பேட்டரி
- மெட்டல் மிடில் பிரேம் டிசைன்
- ஐபி98 / ஐபி69 ரேட்டிங் சேஸிஸ்
- விலை ரூ.50,000 க்குள் (ரூ.45,990) இருக்கலாம்

ரூ.50,000 க்குள் என்கிற பட்ஜெட் சற்று அதிகமாகவே தெரிகிறது. ஏனென்றால் இந்தாண்டு தொடக்கத்தில், இந்தியாவில் அறிமுகமான போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.26,999 க்கு வாங்க கிடைத்தது. ஆனால் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மாடல் ஆனது பெரிய விலை அதிகரிப்பை காணும் என்பது போல் தெரிகிறது.

போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 3200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ உடனான 6.73-இன்ச் 1.5கே பிளாட் AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்ட்ரா சிப்செட்
- LPDDR5X ரேம் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜ்

- 50 மெகாபிக்சல் சோனி LYT-600 ப்ரைமரி சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 20எம்பி செல்பீ கேமரா
- 90W ஹைப்பர்சார்ஜ் ஆதரவு
- 6,550mAh பேட்டரி
- நிறுவனத்தின் கூற்றுப்படி இது 47 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் சார்ஜ் செய்யும்

போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஆனது போக்கோ எக்ஸ்8 உடன் சேர்ந்து அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போக்கோ எக்ஸ்8 ஆனது ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி (Redmi Note 15 Pro 5G) மாடலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போன்கள் - 6.83-இன்ச் 1.5கே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான OLED LTPS டிஸ்பிளே, டைமன்சிட்டி 7400 சிப், 200-மெகாபிக்சல் + 8-மெகாபிக்சல் (அல்ட்ரா-வைட்) + 2-மெகாபிக்சல் (மேக்ரோ) ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 20-மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 45W சார்ஜிங் கொண்ட 6,580mAh பேட்டரி ஆகியவற்றுடன் வரும் என்று ஊகங்கள் தெரிவிக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco X8 Pro India Launch Soon Tipped to Pack 9000mAh Battery Rebranded Version of Redmi Turbo 5
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X