10000எம்ஏஎச் பேட்டரி உடன் களமிறங்கும் புதிய போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?
போக்கோ எக்ஸ்8 பவர் (Poco X8 Power) ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 4-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது போக்கோ நிறுவனம். குறிப்பாக இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
போக்கோ எக்ஸ்8 பவர் அம்சங்கள் (Poco X8 Power Specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 எஸ்ஒசி (Qualcomm's Snapdragon 6 Gen 5 SoC) சிப்செட் உடன் போக்கோ எக்ஸ்8 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

6.83-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே உடன் போக்கோ எக்ஸ்8 பவர் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 3500 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ், 68 பில்லியன் கலர்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் போக்கோ எக்ஸ்8 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனின் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவுகளுடன் போக்கோ எக்ஸ்8 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் போக்கோ எக்ஸ்8 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதியுடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் IP68, IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் போக்கோ எக்ஸ்8 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதூகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

போக்கோ எக்ஸ்8 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 10000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் போக்கோ எக்ஸ்8 பவர் ஸ்மார்ட்போன் ரூ.35,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications