Home
Mobile

பொளந்து கட்டிய POCO.. 10000mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP SONY மெயின் கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் அடுத்த 10000mAh பேட்டரி கொண்ட மாடலாக போகோ எக்ஸ்8 பவர் 5ஜி (POCO X8 Power 5G) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதியாகி இருக்கிறது. கூடவே, முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்து எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. வீகன் லெதர் பேனல் டிசைனையும் பார்க்க முடிகிறது.

கடந்த ஜனவரி மாதத்தில் 10001mAh பேட்டரி கொண்ட மாடலாக ரியல்மி பி4 பவர் 5ஜி (realme P4 Power 5G) ஸ்மார்ட்போன் வெளியாகியது. இதற்கு பிறகு 9000mAh பேட்டரி, 8000mAh பேட்டரி செக்மெண்ட்டில் மட்டுமே மாடல்கள் வெளியாகின. 10001mAh பேட்டரிக்கு போட்டியாக எந்த மாடலும் களமிறங்கவில்லை. இப்போது, போகோ அந்த இடத்துக்கு வர இருக்கிறது.

பொளந்து கட்டிய POCO.. 10000mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்!

போகோ எக்ஸ்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போனில் 10000mAh பேட்டரியை கொடுக்க இருக்கிறது. 3.5 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். டூயல் டேன் பினிஷிங் மற்றும் எல்லோ கலரில் வெளியாக இருக்கிறது. வீகன் லெதர் பேனல் கொடுக்க இருக்கிறது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொடுக்கப்பட இருக்கிறது. செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த விவரங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. மற்ற பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் விவரங்கள் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், மார்கெட்டில் போகோ எக்ஸ்8 5ஜி (POCO X8 5G) மற்றும் போகோ எக்ஸ்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போன்களின் முக்கிய பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் செக்மெண்ட் விவரங்கள் கசிந்துவிட்டன. இதை பார்க்கலாம்.

போகோ எக்ஸ்8 பவர் 5ஜி அம்சங்கள் (POCO X8 Power 5G Specifications): 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10000mAh பேட்டரியை கொடுக்க இருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 (SONY IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட இருக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்க இருக்கிறது.

மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொடுக்கப்பட இருக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 (Qualcomm Snapdragon 6 Gen 5) சிப்செட் கொடுக்கப்பட இருக்கிறது. 6.83 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கொடுக்கப்பட உள்ளது. இதில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட இருக்கிறது.

4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் + 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்க இருக்கின்றன. IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் ரூ.35,000 பட்ஜெட்டில் வெளியாக இருக்கிறது. இந்த பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமேயாகும்.

அதேபோல போகோ எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்களும் கசிந்துள்ளன. இதை பார்க்கையில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 (Qualcomm Snapdragon 6s Gen 4) சிப்செட் கொடுக்கப்பட உள்ளது. சாம்சங் ஜேஎன்எல் சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்க உள்ளது.

67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9000mAh பேட்டரியுடன் வெளியாக இருக்கிறது. இதிலும் 6.83 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் வர இருக்கிறது. இந்த போகோ எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போனின் பட்ஜெட் ரூ.28,000 முதல் ரூ.30,000 வரையில் இருக்கலாம்.

Best Mobiles in India

English summary
POCO X8 Power 5G With 10000mAh Battery Launching in India on September 4 Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X