Home
Mobile

யாரு சாமி அவன்.. 10000mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் போகோ நிறுவனத்தின் முதலாவது 10000mAh பேட்டரி மாடலான போகோ எக்ஸ்8 பவர் 5ஜி (POCO X8 Power 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பேட்டரி மட்டுமல்லாமல், கேமரா, சிப்செட் போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது.

வெறும் 20 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 1 நாள் முழுக்க பேக்கப் கொடுக்கும்படி 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 1,600 சார்ஜிங் சைக்கிள்களுக்கு பிறகும் 80 சதவீத பேட்டரி ஹெல்த் கிடைக்கும் என்பதால், கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கும். இதனாலேயே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. முதலில் முழு பீச்சர்களையும் பார்க்கலாம்.

யாரு சாமி அவன்.. 10000mAh பேட்டரி.. 100W பாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா!

போகோ எக்ஸ்8 பவர் 5ஜி அம்சங்கள் (POCO X8 Power 5G Specifications): கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப டிஸ்பிளேவில் பிரீமியம் காட்டி இருக்கிறது. 6.83 இன்ச் (2772 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொடுக்கிறது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 3200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கப்பட்டு இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Xiaomi Hyper OS 3) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைக்கிறது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 5 4nm) சிப்செட்டை இந்த போகோ எக்ஸ்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. அட்ரினோ 812 ஜிபியு (Adreno 812 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மாடலாக இருக்கிறது. சியோமி ஹைப்பர்ஏஐ (Xiaomi HyperAI) கிடைக்கிறது. ஏஐ கிளார் ரிமூவல் (AI Glare Removal), ஏஐ எரைஸ் ப்ரோ (AI Erase Pro) உள்ளது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. ஓஐஎஸ் டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவுடன் இந்த போகோ எக்ஸ்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது.

அண்டர்வாட்டர் கேமரா அவுட்புட் கொடுக்கும்படி IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.

100W ஹைப்பர்சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10000mAh பேட்டரி மற்றும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 8.65 எம்எம் தடிமன் மற்றும் 229 கிராம் எடை கொடுக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38,999ஆகவும் இருக்கிறது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
POCO X8 Power 5G With 10000mAh Battery Launched in India Sale From September 1 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X