Home
Mobile

தூக்குங்டா அந்த தங்கத்த.. ரூ.1700 ஆஃபரில் 10000mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் 10000mAh பேட்டரி கொண்ட மாடலாக களமிறங்கிய போகோ எக்ஸ்8 பவர் 5ஜி (POCO X8 Power 5G) ஸ்மார்ட்போனின் விற்பனையானது, தள்ளுபடியுடன் தொடங்கிவிட்டது. 10000mAh மட்டுமல்லாமல், 100W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்கள் கிடைப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த போகோ எக்ஸ்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,999 ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38,999ஆக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,700 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.34,299 விலைக்கு இந்த 10000mAh பேட்டரி மாடலை வாங்கி கொள்ளலாம்.

தூக்குங்டா அந்த தங்கத்த.. ரூ.1700 ஆஃபரில் 10000mAh பேட்டரி.. மாடல்?

இதுபோக 12 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ கொடுக்கப்படுகிறது. ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கும்போது எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், ரூ.1,000 தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. எல்லோ (Yellow) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் இந்த போகோ எக்ஸ்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது. இப்போது, பீச்சர்களை பார்க்கலாம்.

போகோ எக்ஸ்8 பவர் 5ஜி அம்சங்கள் (POCO X8 Power 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 5 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Xiaomi Hyper OS 3) மற்றும் அட்ரினோ 812 ஜிபியு (Adreno 812 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 கிடைப்பதால், சியோமி ஹைப்பர்ஏஐ (Xiaomi HyperAI) சப்போர்ட் கிடைக்கிறது. டிஸ்பிளேவில் இந்த போகோ எக்ஸ்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போனானது, அல்ட்ரா பிரீமியம் காட்டி இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.83 இன்ச் (2772 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த போகோ எக்ஸ்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

மேலும், 1.5K ரெசொலூஷன், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது. இதுபோக 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுத்து இருக்கிறது.

மொத்தமாக இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கிடைக்கிறது. ஏஐ கிளார் ரிமூவல் (AI Glare Removal), ஏஐ எரைஸ் ப்ரோ (AI Erase Pro) உள்ளிட்ட பீச்சர்களுடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி சப்போர்ட் கிடைக்கிறது.

இதுபோக 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா உள்ளது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 100W ஹைப்பர்சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10000mAh பேட்டரி கிடைக்கிறது. 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
POCO X8 Power 5G With 10000mAh Battery Gets Rs 1700 Discount in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X