Home
Mobile

நாளை களமிறங்கும் புதிய போக்கோ 5ஜி போன்.. 10000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்? என்ன விலை?

சமீபத்தில் போக்கோ நிறுவனம் போக்கோ எக்ஸ்8 பவர் 5ஜி (POCO X8 Power 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் ஆனது நாளை (செப்டம்பர் 11) முதல் முறையாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. அதுவும் நாளை மதியம் 12 மணி அளவில் இந்த போனை வாங்க முடியும். இப்போது போக்கோ எக்ஸ்8 பவர் 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

போக்கோ எக்ஸ்8 பவர் 5ஜி அம்சங்கள் (POCO X8 Power 5G Specifications): 6.83 இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே உடன் போக்கோ எக்ஸ்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2772×1280 பிக்சல்ஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், 3200 நிட்ஸ் பிரைட்னஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass Victus 2 Protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

நாளை களமிறங்கும் புதிய போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 5 4nm) சிப்செட் உடன் போக்கோ எக்ஸ்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் அட்ரினோ 812 ஜிபியு (Adreno 812 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போனில் உள்ளது.

சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Xiaomi Hyper OS 3) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சியோமி ஹைப்பர்ஏஐ (Xiaomi HyperAI), ஏஐ கிளார் ரிமூவல் (AI Glare Removal), ஏஐ எரைஸ் ப்ரோ (AI Erase Pro) போன்ற மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இதில் உள்ளன.

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் போக்கோ எக்ஸ்8 பவர் 5ஜி போன் வெளியாகி உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) ஆதரவுகளுடன் இந்த
போன் வெளியாகி உள்ளது.

IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது போக்கோ எக்ஸ்8 பவர் 5ஜி போன். அதேபோல் இந்த போனில் டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் போக்கோ எக்ஸ்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

10000mAh பேட்டரி, 100W ஹைப்பர்சார்ஜிங், 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளுடன் போக்கோ எக்ஸ்8 பவர் 5ஜி போன் வெளியாகி உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 5 802.11 ஏசி, புளூடூத் 6.0, ஜிபிஎஸ், குளோனாஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

போக்கோ எக்ஸ்8 பவர் 5ஜி விலை
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்8 பவர் 5ஜி மாடலின் விலை ரூ.35,999-ஆக உள்ளது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்8 பவர் 5ஜி மாடலின் விலை ரூ.38,999-ஆக உள்ளது.
இந்த போனுக்கு ரூ.2000 கூப்பன் சலுகையும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
POCO X8 Power 5G Phone With 10000mAh Battery and 50MP Camera Goes on Sale Tomorrow
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X