மொத்த இந்தியாவும் வெயிட்டிங்.. 9000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனம் அடுத்து புதிய போக்கோ எக்ஸ்8 (Poco X8) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் டீசர் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
குறிப்பாக அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் போக்கோ எக்ஸ்8 வெளிவரும். மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த போக்கோ எக்ஸ்8 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

போக்கோ எக்ஸ்8 அம்சங்கள் (Poco X8 specifications): 6.83-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் போக்கோ எக்ஸ்8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 3500 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.
IP66, IP68, IP69, IP69K தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் போக்கோ எக்ஸ்8 ஸ்மார்ட்போன் வெளிவரும் மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் போக்கோ எக்ஸ்8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் போக்கோ எக்ஸ்8 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதூகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 எஸ்ஒசி (Snapdragon 6s Gen 4 SoC) சிப்செட் உடன் போக்கோ எக்ஸ்8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

9000எம்ஏஎச் (9000mAh) பேட்டரி உடன் போக்கோ எக்ஸ்8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் இந்த போனில் உள்ளன. 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் போக்கோ எக்ஸ்8 ஸ்மார்ட்போன் ரூ.25,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications