Home
Mobile

பொளந்து கட்டிய POCO.. 8340mAh பேட்டரி.. 67W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

போகோ பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டுவைக்கும்படியான பீச்சர்களுடன் போகோ எக்ஸ்8 5ஜி (POCO X8 5G) வெளியாகி இருக்கிறது. 8340mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளேவுடன் வெளியாகி இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 சிப்செட் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.

இப்போது, குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் செப்டம்பர் 4ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆகவே, இந்திய வெளியீட்டுக்கு முன்பே முழு பீச்சர்களையும் பட்ஜெட்டையும் தெரிந்து கொள்ள முடியும். சொல்லப்போனால், இந்த குளோபல் வெர்ஷனில் 8340mAh பேட்டரி மட்டுமே கிடைக்கிறது. இந்திய வெர்ஷனில் 9000mAh கிடைக்க இருக்கிறது.

பொளந்து கட்டிய POCO.. 8340mAh பேட்டரி.. 67W ஃபாஸ்ட் சார்ஜிங்.. மாடல்?

ஆனால், டிசைனில் எந்த மாறுபடும் இல்லை. ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. குளோபல் மார்கெட்டில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. பேசிக் வேரியண்ட்டின் விலை ரூ.25,000 பட்ஜெட்டில் இருக்கிறது. இந்தியாவில் இதே செக்மெண்ட்டில் எதிர்பார்க்கலாம்.

இருப்பினும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலானது இந்தியாவில் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல பிளாக் (Black), ஒயிட் (White) மற்றும் ஆரஞ்ச் (Orange) ஆகிய கலர்கள் குளோபல் மார்கெட்டில் கிடைக்கின்றன. இதே கலர் வேரியண்ட்கள் இந்தியாவில் கிடைக்க இருப்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இப்போது, குளோபல் வேரியண்ட்டில் முழு பீச்சர்களை பார்க்கலாம்.

போகோ எக்ஸ்8 5ஜி அம்சங்கள் (POCO X8 5G Specifications): 6.83 இன்ச் (2772 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி உள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6s Gen 4 4nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஹைப்பர் ஓஎஸ் 3 (Hyper OS 3) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது.

16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த போகோ எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர்ப்ரூப் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

8.6 எம்எம் தடிமன் மற்றும் 223 கிராம் எடை உள்ளது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8340mAh பேட்டரியானது இந்த போகோ எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் (Wired Reverse Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்பிராரெட் சென்சார் கொண்ட மாடலாகவும் உள்ளது.

Best Mobiles in India

English summary
POCO X8 5G With Snapdragon 6s Gen 4 Chip Launched For Global Market Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X