தேதி குறிச்சாச்சு.. 9000mAh பேட்டரி.. 67W ஃபாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. IP69K ரேட்டிங்.. எந்த மாடல்?
போகோ (POCO) நிறுவனத்தின் பெரிய பேட்டரி மாடலான போகோ எக்ஸ்8 5ஜி (POCO X8 5G) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தேதியுடன் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், ஐபி ரேட்டிங், டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்களும் உறுதியாகி இருக்கின்றன. இந்த போகோ எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.
வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதியில் போகோ எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் போகோ எக்ஸ்8 பவர் (POCO X8 Power 5G) ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கின்றன. இதில் போகோ எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போன் 9000mAh பேட்டரி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. பிரீமியம் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது.

பெரிய பேட்டரி மாடல்களில் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பெரிதாக இருக்காது. ஆனால், இந்த போகோ எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ஐபி66 ரேட்டிங், ஐபி68 ரேட்டிங், ஐபி69 ரேட்டிங் மற்றும் ஐபி69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்க இருக்கிறது. இது ஒட்டுமொத்த பாடிக்கும் பொருந்தும். டிஸ்பிளேவுக்கு தனியாக புரொடெக்சன் கிடைக்கிறது.
ஆகவே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சனை பெற்று கொள்ளலாம். எஸ்ஜிஎஸ் சர்டிபிகேஷன் கொண்டுள்ளது. ஆகவே, கிரஸ் ரெசிஸ்டன்ஸ், டிராப் ரெடிஸ்டன்ஸ், பெண்டிங் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கும். இதுபோக அண்டர்வாட்டர் கேமரா மோட் (Underwater Camera Mode) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
2 மீட்டர்கள் ஆழம் வரையில் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும். 30 நிமிடங்கள் வரையில் அண்டர்வாட்டரில் கேமரா ரெக்கார்டிங் செய்யலாம். ஆகவே, பிரீமியம் டியூரிபிலிட்டி கொண்ட ஸ்மார்ட்போனாக இந்த போகோ எக்ஸ்8 5ஜி வெளியாக இருக்கிறது. இதேபோல கேமரா, பேட்டரி, டிஸ்பிளே போன்ற மற்ற பீச்சர்களும் பட்டையை கிளப்புகின்றன.
போகோ எக்ஸ்8 5ஜி அம்சங்கள் (POCO X8 5G Specifications): 6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10பிளஸ் கொண்டுள்ளது. டியூவி டிரிபிள் ஐ புரொடெக்சன் மற்றும் வெட் டச் டிஸ்பிளே 2.0 கிடைக்கிறது.
டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கிடைக்கின்றன. இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், 3.2 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி 9000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பேட்டரிக்கு 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், பைபாஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 35 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். 22 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 1.2 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட் சார்ஜிங், பிபிஎஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.
6 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் கிடைக்கிறது. இதற்கு பிறகு 80 சதவீத பேட்டரி ஹெல்த் அப்படியே இருக்கும். பிளாக், ப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் பீயரி ஆரஞ்ச் ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. வருகிற நாட்களில் முழு பீச்சர்கள மற்றும் பட்ஜெட் விவரங்கள் தெரியவரும்.


Click it and Unblock the Notifications