செப்.11 குறிச்சாச்சு.. 9000mAh பேட்டரி.. 67W பாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 50MP OIS கேமரா.. எந்த மாடல்?
பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு இருக்கிறது. கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்களைடையே அதிக எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்த வரிசையில் போகோ ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. 9000mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய மார்கெட்டில் போகோ எக்ஸ்8 5ஜி (POCO X8 5G) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. 4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்து இருக்கிறது. கொரில்லா கிளாஸ் உள்ளிட்ட புரொடெக்சன்களுடன் பைவ்-ஸ்டார் குவாலிட்டி சர்டிபிகேஷன்களை பெற்றுள்ளது.

போகோ எக்ஸ்8 5ஜி அம்சங்கள் (POCO X8 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6s Gen 4 4nm) சிப்செட்டை இந்த போகோ எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi Hyper OS 3) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. 6.83 (2772 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
கேமிங் பிரியர்களுக்காக 3200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இதுபோக எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9000mAh பேட்டரியை இந்த போகோ எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது.
இன்பிராரெட் சென்சாரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. மேலும், IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69K ரேட்டிங் கொடுக்கப்படுகிறது. 8.6 எம்எம் தடிமன் மற்றும் 223 கிராம் எடை கொண்ட மாடலாக இந்த போகோ எக்ஸ்8 5ஜி இருக்கிறது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 29,999 ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,999 ஆகவும் இருக்கிறது. வருகிற செப்டம்பர் 11ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ரூ.2,000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட்/எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. இதுபோக 12 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரூ.2,250 முதல் இந்த ஈஎம்ஐ சலுகையை பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.26,999 விலையில் வாங்கி கொள்ளலாம். ஃபைரி ஆரஞ்ச், பிளாக் மற்றும் ப்ரோஸ்ட் ஒயிட் கலர்களில் கிடைக்க உள்ளது.


Click it and Unblock the Notifications