இன்று விற்பனைக்கு வரும் புதிய போக்கோ 5ஜி போன்.. 9000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
போக்கோ நிறுவனம் சமீபத்தில் போக்கோ எக்ஸ்8 5ஜி (POCO X8 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய போக்கோ போன் இன்று முதல் முறையாக பிளிப்கார்ட் தளத்தில் மதியம் 12 மணி அளவில் விற்பனைக்கு வருகிறது. இப்போது இந்த போனின் விலை மற்றும் சலுகைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
போக்கோ எக்ஸ்8 5ஜி அம்சங்கள் (POCO X8 5G specifications): 6.83-இன்ச் 1.5கே அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் போக்கோ எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளேவில்1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 3200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் , 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Vision), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6s Gen 4 4nm) சிப்செட் உடன் போக்கோ எக்ஸ்8 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அட்ரினோ ஜிபியு (Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi Hyper OS 3) மூலம் போக்கோ எக்ஸ்8 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் போக்கோ எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உடன் போக்கோ எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உடன் போக்கோ எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
அதேபோல்IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் உடன் இந்த போக்கோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 8.6 எம்எம் தடிமன் மற்றும் 223 கிராம் எடை கொண்ட மாடலாக இந்த போகோ எக்ஸ்8 5ஜி இருக்கிறது.

9000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த போக்கோ எக்ஸ்8 5ஜி போன் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.
போக்கோ எக்ஸ்8 5ஜி விலை
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்8 5ஜி மாடலின் விலை ரூ.29,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்8 5ஜி மாடலின் விலை ரூ.32,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்8 5ஜி மாடலின் விலை ரூ.35,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications
