பொசுக்குனு பட்ஜெட்.. ரூ.19,999 போதும்.. 5500mAh பேட்டரி.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. போக்கோ எக்ஸ்7 சேல்!
போக்கோ பிரியர்கள் மட்டுமல்லாமல், 3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்களையும் வெயிட்டிங்கில் போட்டுவைத்த போக்கோ எக்ஸ்7 (POCO X7) போனின் விற்பனை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தொடங்கிவிட்டது. டிஸ்பிளே மட்டுமல்லாமல், சோனி சென்சார் கேமரா, கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன், டைமன்சிட்டி 7300 அல்ட்ரா, 5500mAh பேட்டரி போன்ற மற்ற பீச்சர்களிலும் தட்டி தூக்கி இருக்கிறது. இந்த போக்கோ எக்ஸ்7 போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை பார்ப்போம்.
போக்கோ எக்ஸ்7 அம்சங்கள் (POCO X7 Specifications): இந்த போக்கோ போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization), மோஷன் டிராக்கிங் போகஸ் (Motion Tracking Focus) சப்போர்ட் உள்ளது.

4K வீடியோ ஷூட் மற்றும் போக்கோ இமேஜிங் என்ஜின் (POCO Imaging Engine) இருக்கிறது. 20 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கிறது. சியோமி ஹைப்பர் ஓஎஸ் (Xiaomi Hyper OS) பேஸ்டு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா (Octa Core 4nm MediaTek Dimensity 7300 Ultra) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது.
டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு மற்றும் பாடியில் IP66 + IP68 + IP69 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 6.67 இன்ச் (2712 × 1220 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) பேனல் கிடைக்கிறது. இந்த 3டி கர்வ்ட் (3D Curved) டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.
இதுபோக 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. பிரீமியம் வீடியோ அவுட்புட் கொடுக்கும் டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த போக்கோ எக்ஸ்7 போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன.
3டி கர்வ்ட் டிஸ்பிளே பேக் செய்யப்பட்டிருந்தாலும், 5500mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு ஏற்ப 8.4 மிமீ தடிமன் பாடி கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. டைப்-சி சார்ஜிங் மற்றும் டைப்-சி ஆடியோ சப்போர்ட் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் ஆடியோ சப்போர்ட் உள்ளது. இன்பிராரெட் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் கிடைக்கிறது.
போக்கோ எல்லோ (POCO Yellow), காஸ்மிக் சில்வர் (Cosmic Silver) மற்றும் கிளாசியர் (Glacier Green) கலர்களில் ஆர்டருக்கு வருகிறது. இந்த போக்கோ எக்ஸ்7 போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 21,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.2000 அறிமுக சலுகையில் கிடைக்கிறது.
ஆகவே, ரூ.19,999 பட்ஜெட்டில் இந்த போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். போக்கோ எல்லோ வேரியண்ட்டில் டூயல் கலர் மற்றும் வேகன் லெதர் பேனல் கிடைக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளேவுடன் போக்கோவில் மொபைல் வேண்டுமானால், இந்த போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். டிஸ்பிளே, சிப்செட் மற்றும் கேமராவிலும் உங்களுக்கு மிட்-ரேஞ்ச் லெவல் பீல் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








