இதுக்குமேல குறைக்க ஒன்னுமில்ல.. ரூ.8,000 ரேட் கட்ல 6550mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் போகோ எக்ஸ்7 ப்ரோ (POCO X7 Pro) ஸ்மார்ட்போனுக்கு இதுவரையில் கிடைக்காதபடி அதிகபட்ச விலை குறைப்பு கிடைக்கிறது. கூடுதலாக பேங்க் தள்ளுபடியும் கிடைப்பதால், மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம். 6550mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சார் கேமரா, அமோலெட் டிஸ்பிளே பேன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த போகோ எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.27,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.29,999ஆகவும் இருக்கிறது. ஆனால், இப்போது, ரூ.7,000 நேரடி விலை குறைப்பு போக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, 8 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ.20,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

அதேபோல 12 ஜிபி + 512 ஜிபி மெமரி மாடல் ரூ.22,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இதுபோக ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, ரூ.19,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மொத்தமாக ரூ.8,000 விலை கம்மியாக கிடைக்கிறது. இதுவரையில் கிடைக்காதபடி இந்த விலைக்கு கிடைப்பதால், விற்பனை பட்டையை கிளப்புகிறது.
போகோ எக்ஸ்7 ப்ரோ அம்சங்சங்கள் (POCO X7 Pro Specifications): இந்த போகோவில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8400 Ultra 4nm) சிப்செட் கிடைக்கிறது. லேட்டஸ்ட் யுஐ கொடுக்கும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) கிடைக்கிறது.
அதேபோல ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்ட 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலுஷன், டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இதுபோக எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் உள்ளது. இந்த போகோ எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது.
இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், சோனி எல்ஒய்டி 600 (Sony LTY-600) சென்சார் கிடைக்கிறது. ஓம்னிவிஷன் சென்சாருடன் 20 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. பிரீமியம் மாடல்களுக்கு நிகரான வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது.
IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6550mAh பேட்டரி கிடைக்கிறது. ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட், இன்பிராரெட் சென்சார் வருகிறது. 5ஜி எஸ்ஏ/ என்எஸ்ஏ, டுயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 6 கனெக்டிவிட்டி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








