Home
Mobile

மக்காமிஷி.. கெத்தா புது POCO X7 Pro போன் ரெடி.. இந்தியாவிற்கு வரும் புது Xiaomi பட்ஜெட் போன்.. என்ன விலை?

சியோமி (Xiaomi) நிறுவனம் விரைவில் அதன் துணை பிரண்டான போக்கோ (POCO) பிராண்டின் கீழ் புதிதாக போகோ எக்ஸ் 7 ப்ரோ (POCO X7 Pro) என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய போகோ X7 ப்ரோ (POCO X7 Pro) ஸ்மார்ட்போன் சாதனம் மிட் ரேஞ் பட்ஜெட் விருப்பமாக வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் முதல் ஹைப்பர் ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) ஸ்மார்ட்போன் சாதனமாக இது இருக்குமென்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விபரம் இதோ.

சியோமி நிறுவனம் சமீபத்தில் அதன் சியோமி 15 ஸ்மார்ட்போன் சாதனத்தை ஆண்ட்ராய்டு 15 உடன் ஹைப்பர் ஓஎஸ் இயங்குதளத்துடன் சீன ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சியோமி 15 வரிசை சாதனங்கள் இந்தியாவிற்கு வர மார்ச் 2025 ஆகிவிடும் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்பு, சியோமி நிறுவனம் POCO X7 Pro ஸ்மார்ட்போனை HyperOS 2.0 இயங்குதளத்துடன் இந்தியாவில் அறிமுகம் செய்யுமென்று கூறப்பட்டுள்ளது.

மக்காமிஷி.. கெத்தா புது POCO X7 Pro போன் ரெடி.. என்ன விலை?

இந்த சந்தையில் HyperOS உடன் அறிமுகம் செய்யப்படும் முதல் சாதனமாக POCO X7 Pro இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. POCO X7 என்பது ரெட்மி நோட் 14 ப்ரோ (redmi Note 14 Pro) ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட மாடலாக இருக்குமென்று கூறப்படுகிறது. அதேபோல், POCO X7 Pro என்பது ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் (redmi Note 14 Pro+) மாடலின் மறுபெயரிடப்பட்ட வெர்ஷனாக இருக்குமென்று கூறப்படுகிறது.

சியோமி நிறுவனம் சமீபத்தில் தான் Redmi Note 14 சீரிஸ் வரிசையின் அறிமுகத்தை உறுதி செய்தது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வரிசை வரும் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படுமென்று சியோமி அறிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கையில், போகோ X7 ப்ரோ (POCO X7 Pro) சாதனத்தின் அறிமுகம் ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெறுமென்று கூறப்படுகிறது. இந்த சாதனங்கள் பட்ஜெட் விலையுடன் பல ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெளிவருமென்று கூறப்படுகிறது.

நமக்கு தெரிந்த தகவலின் படி, புதிதாக வெளிவரவிருக்கும் போகோ X7 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனம் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் சாதனத்தில் காணப்படும் அதே அம்சங்களை பேக் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அடிப்படையில், POCO X7 Pro போனில் நாம் 6.67" இன்ச் AMOLED டிஸ்பிலேவை (display) எதிர்பார்க்கலாம். இந்த டிஸ்பிளே 1.5K ரெசொலூஷன் உடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) டிஸ்பிளேவாக இது இருக்குமென்று கூறப்படுகிறது.

இந்த போனில் நாம் 50MP + 50MP + 8MP கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா (Triple rear camera) அம்சத்தை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில் 32MP செல்பி கேமரா இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 SoC) உடன் இயங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 6,200mAh என்ற மிகப்பெரிய பேட்டரியை (Battery) பேக் செய்யும்.

இது 90W பாஸ்ட் சார்ஜிங் உடன் வெளிவர அதிக வாய்ப்புள்ளது. இந்த அம்சங்கள் எல்லாம் redmi Note 14 Pro+ காணப்படும் அம்சங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ. 28,000 வரம்பிற்குள் இருக்குமென்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
POCO X7 Pro Might Come With HyperOS 2.0 In India Redmi Note 14 Pro Plus and Xiaomi 15 On Its Way
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X