Home
Mobile

இவரு வேற மாதிரி.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. எந்த மாடல்?

பிரீமியம் டைமன்சிட்டி 8400 அல்ட்ரா சிப்செட், 90W ஹைப்பர்சார்ஜ், 6000mAh பேட்டரி, 1.5K அமோலெட் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலேசேஷன் கேமரா, IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், அயர்ன் மேன் எடிஷனில் (Iron Man Edition) போக்கோ எக்ஸ் 7 ப்ரோ (POCO X7 Pro) போனானது குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் போக்கோ எக்ஸ் 7 சீரிஸ் வெளியாகியதை தொடர்ந்து, இந்த லிமிடெட் எடிஷன் வெளியாகி இருக்கிறது.

லிமிடெட் எடிஷன் மாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதனாலேயே ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அதை களமிறக்குகின்றன. போக்கோ எப்6 போனிலும் டெட்பூல் லிமிடெட் எடிஷன் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இப்போது, அதே மார்வெல் சினிமாடிக் யூனிவர்சில் அயர் மேன் எடிஷன் வெளியாகி இருக்கிறது. முதலில் பீச்சர்களை பார்ப்போம்.

இவரு வேற மாதிரி.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. மாடல்?

போக்கோ எக்ஸ்7 ப்ரோ அயர்ன் மேன் எடிஷன் அம்சங்கள் (POCO X7 Pro Iron Man Edition Specifications): இந்த போக்கோவில் 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த கிரிஸ்டல்ரெஸ் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 16X சூப்பர் ரெசொலூஷன் டச் சப்போர்ட் கிடைக்கிறது.

கேம் டர்போ மோட் (Game Turbo Mode) இருக்கிறது. 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இதுபோக டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10பிளஸ் (HDR10+), ப்ரோ எச்டிஆர் (Pro HDR) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. பிரீமியம் மாடலாக இருப்பதால், கொரில்லா கிளாஸ் 7ஐ (Gorilla Glass 7i) புரொடெக்சனை கொடுக்கிறது.

இந்த போக்கோ எக்ஸ்7 ப்ரோ போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் மோஷன் டிராக்கிங் போகஸ் (Motion Tracking Focus), மோஷன் கேப்ச்சர் (Motion Capture), டைனாமிக் ஷாட்ஸ் (Dynamic Shots) போன்ற பீச்சர்கள் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது.

இவரு வேற மாதிரி.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. மாடல்?

20 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஷூட்டரில் ஓவி20பி (OV20B) சென்சாருடன் சாப்ட்-லைட் ரிங் (Soft-light Ring), ஏஐ பியூட்டிபை (AI Beautify) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த போக்கோ போனில் 90W ஹைப்பர்சார்ஜ் மற்றும் 6000mAh பேட்டரி கிடைக்கிறது. ஏஐ பேஸ் அன்லாக் (AI Face Unlock) சப்போர்ட் கிடைக்கிறது. இப்போது பர்ஃபாமென்ஸ் பக்கம் பார்ப்போம்.

இந்த போக்கோ எக்ஸ்7 ப்ரோ போனில் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) கிடைக்கிறது. ஆக்டா கோர் 4என்எம் டைமன்சிட்டி 8400 அல்ட்ரா (Octa Core 4nm Dimensity 8400 Ultra) சிப்செட் மற்றும் மாலி ஜி720 ஜிபியு (Mali G720 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆகவே, பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கிடைக்கும். ஏனென்றால், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

இந்த போக்கோ எக்ஸ்7 ப்ரோ அயர்ன் மேன் எடிஷனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,255ஆக இருக்கிறது. இருப்பினும், எர்லி பேர்ட் விற்பனையில் ரூ.31,680 பட்ஜெட்டில் கிடைக்கிறது. குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், டெட்பூல் வெர்ஷன் முதலில் குளோபலிலும் பிறகு இந்தியாவிலும் கிடைத்தது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO X7 Pro Iron Man Edition Launched For Global Markets Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X