சறுக்குனு ரூ.4000 விலை குறைக்கப்பட்ட POCO 5ஜி போன்.. IP69, 90W சார்ஜிங், 6550mAh பேட்டரி!
போக்கோ (POCO) நிறுவனத்தின் புதிய போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸின் கீழ் போக்கோ எக்ஸ்8 ப்ரோ 5ஜி, போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஐயர்ன் மேன் எடிஷன் ஆகிய 3 மாடல்கள், இந்திய சந்தையில் இன்று (மார்ச் 17) அறிமுகம் செய்யப்பட்டன.
புதிய போக்கோ எக்ஸ்8 ப்ரோ 5ஜி மாடல் அறிமுகமான வேகத்தில் பழைய போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.23,999 க்கும், ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 2025 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.27,999 க்கும, 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.29,999 க்கும் வாங்க கிடைத்தது. ஆக தற்போது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே ரூ.4000 விலை குறைப்பை பெற்றுள்ளன.
போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.73-இன்ச் 1.5கே பிளாட் அமோஎல்இடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமென்சிட்டி 8400 அல்ட்ரா சிப்செட்
- 50-மெகாபிக்சல் சோனி LYT-600 ப்ரைமரி சென்சார்
- 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 20-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 90W ஹைப்பர்சார்ஜ் ஆதரவுடன் 6,550mAh பேட்டரி
- IP66+IP68+IP69 ரேட்டிங்
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள போக்கோ எக்ஸ்8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: போக்கோ எக்ஸ்8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதே ஸ்மார்ட்போனின் டாப்-ஆஃப்-லைன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.32,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிங்கிள் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ அயர்ன் மேன் எடிஷன் ஆனது ரூ.34,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸில் உள்ள ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது முற்றிலும் புதிய வேரியண்ட் ஆகும். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எக்ஸ்7 சீரீஸின் கீழ் போக்கோ எக்ஸ்7 5ஜி மற்றும் போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி மாடல்கள் இருந்தன; ப்ரோ மேக்ஸ் மாடல் எதுவும் இல் லை. இந்தாண்டு புதிய ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் டாப்-எண்ட் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ரூ.43,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
போக்கோ நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த விலைகளில் - எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ கார்டுகள் மூலம் பெறக்கூடிய வங்கி தள்ளுபடிகள் மற்றும் அறிமுக சலுகைகளும் அடங்கும். ஆக குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் இந்த 3 ஸ்மார்ட்போன்களின் விலைகளும் அதிகரிக்கலாம் என்று அர்த்தம். இந்த 3 ஸ்மார்ட்போன்களுமே மார்ச் 23 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வர உள்ளன.
புதிய போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3
- டூயல் சிம் ஆதரவு
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP66 + IP68 + IP69 + IP69K ரேட்டிங்
- 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்
- டூயல் ரியர் கேமரா யூனிட்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் கூடிய 50-மெகாபிக்சல் (எப்/1.8) பிரைமரி கேமரா
- 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 20-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.83 இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளே
- ப்ரோ மாடலில் 6.59-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே
- ப்ரோ மேக்ஸ் மாடலில் 3என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 9500எஸ் சிப்செட்
- ப்ரோ மாடலில் 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட்
- ப்ரோ மேக்ஸ் மாடலில் 9000mAh பேட்டரி
- ப்ரோ மாடலில் 6500mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








