2025 ஆரம்பமே பட்டையை கிளப்பும் POCO.. பக்கா PRICE-ல் 2 புதிய 5G போன்கள்.. தெறிக்கும் அம்சங்கள்!
போக்கோ (POCO) நிறுவனமானது 2025 ஆம் ஆண்டை 2 புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்துடன் தொடங்குகிறது. அவைகள் போக்கோ நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் போக்கோ எக்ஸ்7 சீரீஸ் (POCO X7 Series) ஸ்மார்ட்போன்கள் ஆகும். இந்த சீரிஸ் இன்று (ஜனவரி 9 ஆம் தேதி) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
போக்கோ எக்ஸ்7 சீரீஸின் வெளியீட்டு நிகழ்வை லைவ் ஆக பார்ப்பது எப்படி? போக்கோ எக்ஸ்7 சீரீஸின் கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள் அறிமுகமாகும்? போக்கோ எக்ஸ்7 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படும்? இதோ விவரங்கள்:

போக்கோ எக்ஸ்7 சீரீஸின் கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள் அறிமுகமாகும்? இந்தியாவிலும் உலகளவில் வெளியிடப்படும் போக்கோ எக்ஸ்7 சீரீஸின் கீழ் போக்கோ எக்ஸ்7 (POCO X7) மற்றும் போக்கோ எக்ஸ்7 ப்ரோ (POCO X7 Pro) என 2 மாடல்கள் அறிமுகமாகும். இவ்விரு மாடல்களுமே போக்கோ எக்ஸ்6 சீரிஸின் அப்கிரேடட் வெர்ஷன்களாக இருக்கும்.
போக்கோ எக்ஸ்7, போக்கோ எக்ஸ்7 ப்ரோ வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? போக்கோ எக்ஸ்7 சீரீஸின் இந்திய வெளியீட்டு நிகழ்வு ஆனது போக்கோ நிறுவனத்தின் அதிகாரப்பூரவ யூட்யூப் சேனலின் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்நிகழ்வு இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு தொடங்கும்.
போக்கோ எக்ஸ்7, போக்கோ எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? போக்கோ எக்ஸ்7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் சரியான விலை விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் கூட, போக்கோ பிராண்டால் பகிரப்பட்ட டீஸர் படங்களின் வழியாக போக்கோ எக்ஸ்7 ப்ரோ மாடலின் விலை ரூ.30,000 க்குள் இருக்கலாம் என்பதை வெளிப்படுத்துகிறது
நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் ப்ராரின் கூற்றுப்படி, போக்கோ எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.25,000 முதல் ரூ.27,000 க்குள் இருக்கலாம். வெண்ணிலா வேரியண்ட் ஆன போக்கோ எக்ஸ்7 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ஆனது ரூ.20,000 முதல் ரூ 22,000 க்குள் இருக்கலாம். அறிமுகத்திற்கு பின்னர் இவ்விரு போன்களும் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது
போக்கோ எக்ஸ்7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிஸ்பிளேவை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 3000நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், 480ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், 1920ஹெர்ட்ஸ் PWM மற்றும் டிம்மிங், கொரில்லா விக்டஸ் 2, வெட் டச் 2.0 உடனான 1.5கே 3டி க்ர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்
மறுகையில் உள்ள போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். சிப்செட்டை பொறுத்தவரை, போக்கோ எக்ஸ்7 ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா (MediaTek Dimensity 7300 Ultra) சிப்செட் மூலம் இயக்கப்படலாம், போக்கோ எக்ஸ்7 ப்ரோ ஆனது டைமன்சிட்டி 8400 அல்ட்ரா (Dimensity 8400 Ultra) சிப்செட் உடன் அனுப்பப்படலாம்.
கேமராக்களை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்7 ஆனது OIS+EIS உடனான 50எம்பி சோனி LYT600 ப்ரைமரி கேமரா மற்றும் 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸை கொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் இது 20எம்பி செல்பீ கேமராவை பெறலாம். போக்கோ எக்ஸ்7 ப்ரோ மாடலிலும் இதே போன்ற செட்டப் இருக்கலாம்ல் ஆனால் அது வெவ்வேறு சென்சார்களை பேக் செய்யலாம்
பேட்டரியை பொறுத்தவரை, போக்கோ எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6,550mAh பேட்டரியை கொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை பெறலாம். வெண்ணிலா வேரியண்ட் ஆன போக்கோ எக்ஸ்7 ஆனது 5,110mAh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போக்கோ எக்ஸ்7 ப்ரோ ஆனது இந்தியாவில் ஹைப்பர்ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) உடன் வரும் என்பதும்,போக்கோ எக்ஸ்7 நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP66+IP68+IP69 ரேட்டிங்கை கொண்டிருப்பதும் கூட உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








