ஜனவரி 9 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. வருகிறது புதிய POCO 5ஜி போன்கள்..
போக்கோ நிறுவனம் தனது போக்கோ எக்ஸ்7 (POCO X7) மற்றும் போக்கோ எக்ஸ்7 ப்ரோ (POCO X7 Pro) ஸ்மார்ட்போன்களை வரும் ஜனவரி 9-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் கம்மி விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த போக்கோ எக்ஸ்7 மற்றும் போக்கோ எக்ஸ்7 ப்ரோ போன்களின் அம்சங்களைப் பார்க்கலாம்.
போக்கோ எக்ஸ்7 அம்சங்கள் (POCO X7 specifications): 6.67-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த போக்கோ எக்ஸ்7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்இ எச்டிஆர் 10 பிளஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. குறிப்பாக Xiaomi HyperOS 2 சார்ந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன்.

OISஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு இந்த போனில் உள்ளது. மேலும் 20எம்பி செல்பி கேமரா, இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த போக்கோ எக்ஸ்7 போன் வெளிவரும்.
5110mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா (Octa Core MediaTek Dimensity 7300 Ultra), மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ், 12ஜிபி ரேம், 512ஜிபி மெமரி மற்றும் பல சிறப்பான அம்சங்கள் இந்த போக்கோ எக்ஸ்7 போனில் உள்ளது.
போக்கோ எக்ஸ்7 ப்ரோ அம்சங்கள் (POCO X7 Pro Specifications): 6.67-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த போக்கோ எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. குறிப்பாக Xiaomi HyperOS 2 சார்ந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன்.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பு இந்த போனில் உள்ளது. மேலும் 20எம்பி செல்பி கேமரா,இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த போக்கோ எக்ஸ்7 ப்ரோ போன் வெளிவரும்.

6000mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்ட்ரா (Octa Core MediaTek Dimensity 8400 Ultra), மாலி ஜி720 எம்சி6 ஜிபியு (Mali-G720 MC6 GPU) கிராபிக்ஸ், 12ஜிபி ரேம், 512ஜிபி மெமரி மற்றும் பல சிறப்பான அம்சங்கள் இந்த போக்கோ எக்ஸ்7 ப்ரோ போனில் உள்ளது.
குறிப்பாக போக்கோ எக்ஸ்7 மற்றும் போக்கோ எக்ஸ்7 ப்ரோ கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே இந்த இரண்டு போன்களுக்கும் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








