மொத்த தீபாவளி ஆபரும் இதுக்கு ஈடாகாது.. ரூ.13,299-க்கு 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் போகோ எக்ஸ்7 5ஜி (POCO X7 5G) போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.14,000 பட்ஜெட்டுக்கும் கம்மியான விலையில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5500mAh பேட்டரி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 புரொடெக்டன் கொடுக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா சிப்செட் கொண்ட இந்த போகோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.23,999ஆக இருக்கிறது. ஆனால், பிளிப்கார்ட் தளத்தில் நேரடி விலை குறைப்பு போக 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.13,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.15,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், ரூ.700 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.13,299 பட்ஜெட்டில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே கொண்ட இந்த போகோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். 256 ஜிபி மெமரி வேரியண்ட்டுக்கு ரூ.800 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது.
போகோ எக்ஸ்7 5ஜி அம்சங்கள் (POCO X7 5G Specifications): இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் (2712× 1220 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன் ரெசொலூஷன் உள்ளது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இந்த போகோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Ultra 4nm) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு சியோமி ஹைப்பர் ஓஎஸ் (Xiaomi Hyper OS) வருகிறது.
மேலும், மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களையும், 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களையும் கொடுக்கிறது. இந்த போகோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போனில் பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் மற்றும் சேப் சார்ஜிங் கன்ட்ரோல் (Safe Charging Control) கிடைக்கிறது. இந்த போகோ போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.
இந்த கேமராவில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் கிடைக்கிறது. மேலும் 20 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இந்த போகோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போனில் (Yellow) காஸ்மிக் சில்வர் (Cosmic Silver) மற்றும் கிளாசியர் கிரீன் (Glacier Green) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








