Home
Mobile

ஜன.14 முதல் விற்பனை.. வாய் பிளக்க வைக்கும் விலையில் POCO X7 5ஜி, POCO X7 Pro 5ஜி அறிமுகம்!

போக்கோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களான போக்கோ எக்ஸ்7 5ஜி (Poco X7 5G) மற்றும் போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி (Poco X7 Pro 5G) ஆகீஐ மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன? இவைகளின் விலை நிர்ணயம் என்ன? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? இதோ விவரங்கள்:

போக்கோ எக்ஸ்7 5ஜி, போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை, சலுகை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.21,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.23,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் காஸ்மிக் சில்வர், கிளேசியர் கிரீன் மற்றும் போக்கோ யெல்லோ ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும்.

ஜன.14 முதல் விற்பனை.. POCO X7 5ஜி, POCO X7 Pro 5ஜி அறிமுகம்!

மறுகையில் உள்ள போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.26,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.28,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் நெபுலா கிரீன், அப்சிடியன் பிளாக் மற்றும் போக்கோ யெல்லோ ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும்

விற்பனையை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஆனது ஜனவரி 14 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும். போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஜனவரி 17 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வம். இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும். ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.2,000 பேங்க் ஆபர்-ஐ பெறலாம். முதல் நாள் விற்பனையில் ப்ரோ மாடலை வாங்குபவர்கள் கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடி கூப்பனை பெறுவார்கள்.

போக்கோ எக்ஸ்7 5ஜி மற்றும் போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள்: போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா விக்டஸ் 2 உடனான 6.67-இன்ச் 1.5கே கர்வ்ர்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 3200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ உடனான 6.73-இன்ச் 1.5கே பிளாட் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்ட்ரா சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது

வெண்ணிலா வேரியண்ட் LPDDR4X RAM மற்றும் UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜை ஆதரிக்கிறது மற்றும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான HyperOS உடன் அனுப்பப்படுகிறது. ப்ரோ வேரியண்ட் ஆனது LPDDR5X ரேம் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜிற்கான ஆதரவை கொண்டுள்ளது; கூடவே HyperOS 2.0 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகிறது

கேமராக்களை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது OIS மற்றும் EIS ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் சென்சாரை கொண்டுள்ளது; அதே சமயம் ப்ரோ மாடலில் 50 மெகாபிக்சல் சோனி LYT-600 ப்ரைமரி சென்சார் உள்ளது. இரண்டு மாடல்களிலும் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் 20எம்பி செல்பீ கேமரா உள்ளது

பேட்டரியை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90W ஹைப்பர்சார்ஜ் ஆதரவுடன் 6,550mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 47 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் சார்ஜ் செய்யும் என்று கூறப்படுகிறது. மறுகையில் உள்ள போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO X7 POCO X7 Pro Launched in India Price Specifications Sale Start on January 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X