விட்ராதீங்க சார்.. பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. 45W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் போக்கோ எக்ஸ்7 5ஜி (POCO X7 5G) மற்றும் போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி (POCO X7 Pro 5G) போன்களுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. போக்கோ மகளிர் தின விற்பனையில் (POCO Women Day Sale) இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த போக்கோ மாடல்களின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த போக்கோ மகளிர் தின விற்பனையானது, மார்ச் 7ஆம் தேதி தொடங்கிவிட்டது. மார்ச் 13ஆம் தேதி வரையில் பிளிப்கார்ட் தளத்தில் நடக்கிறது. ஆகவே, போக்கோ பிரியர்கள் இந்த நாட்களுக்குள் ஆர்டர் செய்தால், பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட்டில் மாடல்களை வாங்கி கொள்ளலாம். இதில் போக்கோ எக்ஸ்7 சீரிஸ் மாடல்கள் மிட்-ரேஞ்ச் பீச்சர்களை பட்ஜெட்டில் கொடுக்கின்றன.

போக்கோ எக்ஸ்7 5ஜி அம்சங்கள், விலை (POCO X7 5G Specifications, Price): இந்த போக்கோ போனில் 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் 7300 அல்ட்ரா (4nm Octa Core MediaTek Dimensity 7300 Ultra) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS), சியோமி ஹைப்பர் ஓஎஸ் (Xiaomi Hyper OS) மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) உடன் 6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2), டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் 3000 பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா (சோனி எல்ஒய்டி 600 சென்சார்) + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. 20 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.
இந்த போக்கோ எக்ஸ்7 5ஜி போனில் 5500mAh பேட்டரி வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் மார்கெட் விலை ரூ.21,999 ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் போக்கோ மகளிர் தின விற்பனையில் வெறும் ரூ.18,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் கூடுதலாக ரூ.1,000 டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி பேங்க் கார்டுக்கு பெற்று கொள்ளாலாம்.

போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி அம்சங்கள், விலை (POCO X7 Pro 5G Specifications, Price): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (HyperOS 2), ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8400 Ultra 4nm) சிப்செட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா (சோனி எல்ஒய்டி 600 சென்சார் + ஓஐஎஸ் + ஈஐஎஸ்) கிடைக்கிறது.
8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 20 எம்பி செல்பீ கேமரா (ஓவி20பி) சென்சார் கிடைக்கிறது. 6550mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) கொண்ட 6.67 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் டால்பி விஷன், எச்டிஆர்10பிளஸ், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் போன்ற பிரீமியம் பீச்சர்கள் கிடைக்கின்றன.
இந்த போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் மார்கெட் விலை ரூ.27,999 ஆக இருக்கிறது. இப்போது, போக்கோ மகளிர் தின விற்பனையை முன்னிட்டு ரூ.25,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.1,300 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, மிட்-ரேஞ்ச் பீச்சர்களுடன் பட்ஜெட்டில் இந்த மாடல்களை வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








