Home
Mobile

இதுதான் புதிய போக்கோ 5ஜி போன்.. சோனி கேமரா.. 44W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எக்ஸ்7 5ஜி (Poco X7 5G) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) உடன் இந்த போன் வெளிவரும். அதேபோல் பச்சை, கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் புதிய போக்கோ 5ஜி போன்.. சோனி கேமரா, 44W சார்ஜிங்.. எந்த மாடல்?

போக்கோ எக்ஸ்7 5ஜி அம்சங்கள் (Poco X7 5G Specifications): 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 பிரைமரி சென்சார் + 8எம்பி சோனி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கறி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளது.

இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போக்கோ போனில் உள்ளன. குறிப்பாக HyperOS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா எஸ்ஒசி (MediaTek Dimensity 7300 Ultra SoC)உடன் போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்படும் சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

5500mAh பேட்டரி உடன் போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6.67-இன்ச் 1.5கே அமோலெட் (AMOLED) உடன் போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

photo credit: Passionategeekz, poco

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco X7 5G images and specifications leaked online: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X