ரூ.500, ரூ.1000 இல்ல.. அதுக்கும் மேல.. ஆஃபர் விலையில் விற்பனையை ஆரம்பித்த POCO X6, POCO X6 Pro போன்கள்!
போக்கோ (POCO) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக இந்தியாவில் அறிமுகமான போக்கோ எக்ஸ்6 சீரீஸ் (POCO X6 Series) மாடல்களின் விற்பனை, இன்று (ஜன.16) முதல் தொடங்குகிறது. இவ்விரு ஸ்மார்ட்போன்களின் அசல் விலை என்ன? ஆஃபர் விலை என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கின்றன? இதோ விவரங்கள்:
சில தினங்களுக்கு முன்பு.. சரியாக கடந்த ஜனவரி 11 ஆம் தேதியன்று நடந்த உலகளாவிய வெளியீட்டு நிகழ்வில் அறிமுகமான போக்கோ எக்ஸ்6 (POCO X6) மற்றும் போக்கோ எக்ஸ்6 ப்ரோ (POCO X6 Pro) ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 16 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனைக்கு வருகின்றன.

போக்கோ எக்ஸ்6 ப்ரோ விலை விவரங்கள்: இந்தியாவில் போக்கோ எக்ஸ்6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256 ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.26,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது போக்கோ யெல்லோ (Poco Yellow), ரேஸிங் க்ரே (Racing Grey) மற்றும் ஸ்பெக்டர் பிளாக் (Spectre Black) கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.
போக்கோ எக்ஸ்6 விலை விவரங்கள்: இந்தியாவில் போக்கோ எக்ஸ்6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256 ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.21,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மிரர் பிளாக் ( Mirror Black) மற்றும் ஸ்னோஸ்டார்ம் ஒயிட் (Snowstorm White) கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

போக்கோ எக்ஸ்6, போக்கோ எக்ஸ்6 ப்ரோ மீதான அறிமுக சலுகைகள்: ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்தி போக்கோ எக்ஸ்6, போக்கோ எக்ஸ்6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 உடனடி தள்ளுபடி (Instant discount) கிடைக்கும் ஏன்னு அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்கோ எக்ஸ்6 ப்ரோ, போக்கோ எக்ஸ்6 அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) கொண்டு இயங்குகின்றன. நிறுவனத்தின் கூற்றுப்படி இரண்டு போன்களும் 3 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களை பெறும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இரண்டுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் 1.5கே (1220 x 2712 பிக்சல்ஸ்) டிஸ்பிளேக்களை கொண்டுள்ளன. முக்கிய வேறுபாடுகளை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்6 ப்ரோ ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 8300 அல்ட்ரா சிப்செட்டை (MediaTek Dimensity 8300 Ultra SoC) பேக் செய்கிறது.
மறுகையில் உள்ள போக்கோ எக்ஸ்6 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 Chipset) மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்6 மற்றும் போக்கோ எக்ஸ்6 ப்ரோ ஆகிய இரண்டுமே ஒரே மாதிரியான ரியர் கேமரா செட்டப் மற்றும் செல்பீ கேமராக்களை கொண்டுள்ளது.
இரண்டிலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான 64 மெகாபிக்சல் மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை இரண்டுமே 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
போக்கோ எக்ஸ்6 மற்றும் போக்கோ எக்ஸ்6 ப்ரோ ஆகிய இரண்டுமே முறையே 5,000mAh மற்றும் 5,100mAh பேட்டரிகளை கொண்டுள்ளன. ஆனால் இரண்டுமே 67W ஃபாஸ்ட் சர்ஜிங்கை ஆதரிக்கும். கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை 5ஜி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. கடைசியாக இரண்டுமே அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனரை கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications








