200MP கேமரா.. 67W சார்ஜிங்.. இந்தியாவில் மாஸ் காட்டப்போகும் POCO போன்.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனம் இந்தியாவில் தனித்துவமான 5ஜி ஸ்மார்ட்போன்களை சற்று குறைந்த விலையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்கள் தரமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் போக்கோ நிறுவனம் இந்தியாவில் போக்கோ எக்ஸ்6 ப்ரோ (Poco X6 Pro) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது BIS சான்றிதழ் தளத்தில் போக்கோ எக்ஸ்6 ப்ரோ ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. பின்பு இந்த போனின் மாடல் எண் 23122PCD1I என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் போக்கோ எக்ஸ்6 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதேசமயம் போக்கோ எக்ஸ்6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 13 ப்ரோ-வின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது சீனாவில் அறிமுகமான ரெட்மி நோட் 13 ப்ரோ மாடல் தான் இந்தியாவில் போக்கோ எக்ஸ்6 ப்ரோ எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது ரெட்மி நோட் 13 ப்ரோ மாடலின் அம்சங்களைப் பார்ப்போம்.
6.67-இன்ச் அமோலெட் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ (Redmi Note 13 Pro) ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
இதுதவிர டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி போன். பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பும் இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் ( Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது ரெட்மி நோட் 13 ப்ரோ போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி ஆகிய 4 வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.
சாம்சங் எச்பி3 (Samsung HP3) சென்சாருடன் கூடிய 200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.

ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5100mAh பேட்டரி. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இதை வேகமாகவும் சார்ஜ் செய்துவிட முடியும்.
குறிப்பாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 13 ப்ரோ மாடல் இந்தியாவில் போக்கோ எக்ஸ்6 ப்ரோ எனும் பெயரில் ரூ.20,000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது போக்கோ எக்ஸ்6 ப்ரோ.


Click it and Unblock the Notifications