அனல் பறக்கும் இந்திய மார்க்கெட்.. 64MP கேமரா.. 90W சார்ஜிங்.. என்ட்ரியாகும் POCO போன்.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வரும் 2024 ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக சீனாவில் வெளியிடப்பட்ட ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி ((POCO X6 Pro 5G) மாடல் இந்தியாவில் டைமன்சிட்டி சிப்செட், 64எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி அம்சங்கள் (POCO X6 Pro 5G specifications): 6.6-இன்ச் 1.5K ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி மாடல் இந்தியாவில் அறிமுகமாகும். இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate),1800 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே ஒரு தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 8300 அல்ட்ரா சிப்செட் (MediaTek Dimensity 8300 Ultra SoC) வசதியுடன் இந்த போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.
ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். அதேபோல் இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும்.
இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் 5500எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ( 90W fast wired charging) ஆதரவு உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








