மார்கெட் காலி.. ரூ.15000 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் போக்கோ எக்ஸ்6 சீரிஸ் (POCO X6 Series) போன்களின் மிகப்பெரும் வரவேற்புக்கு பிறகு அந்த நிறுவனத்தின் அடுத்த போனுக்கான எதிர்பார்ப்பு எகிறி விட்டது. இப்போது, அதைவிட கம்மியான பட்ஜெட்டில் புதிய போன் களமிறங்க இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
போக்கோ எக்ஸ்6 சீரிஸ் போன்கள் ஜனவரி 11ஆம் தேதி இந்தியாவில் வெளியாகின. போக்கோ எக்ஸ்6 (POCO X6) போன் ரூ.21,000 பட்ஜெட்டிலும், போக்கோ எஸ்6 ப்ரோ (POCO X6 Pro) போன் ரூ.26,000 பட்ஜெட்டிலும் விற்பனைக்கு வந்தன. இந்த விலையிலும், அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா என்று அம்சங்களில் மிரட்டின.

இந்த போன்களின் விற்பனை சக்கைப்போடு போட்டு வரும் நேரத்தில், அந்த நிறுவனத்தின் அடுத்த வேரியண்ட்டான போக்கோ எக்ஸ்6 நியோ (POCO X6 Neo) போனின் வெளியீட்டு விவரங்கள் கசிந்து மார்கெட்டை அதிர வைத்துள்ளது. இந்த போன் வரும் மார்ச் மாதத்தில் இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், இந்த போக்கோ எக்ஸ்6 நியோ போனானது, வெறும் ரூ.15,000 பட்ஜெட்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த பட்ஜெட்டிலும் 6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 6080 எஸ்ஓசி (MediaTek Dimensity 6080 SoC) சிப்செட் போன்ற அம்சங்களுடன் வரும் என்று தகவல் கசிந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்த போன் ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ (Redmi Note 13R Pro) போனின் ரீபிராண்ட் வெர்ஷனாக இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்றும் மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ போனின் கசிந்த அம்சங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
இந்த ரெட்மி போனில் 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 60680 6என்எம் சிப்செட் வருகிறது.
அதோடு மாலி ஜி 57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் வருகிறது. 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது.
இந்த ரெட்மியில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், இன்பிராரெட் சென்சார் வருகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ போனில் மிட்நைட் பிளாக் (Midnight Black), டைம் ப்ளூ (Time Blue) மற்றும் டான் கோல்டு (Dawn Gold) ஆகிய மூன்று கலர்களில் வருகிறது.
இந்த போனின் விலை ரூ.23,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது. இந்த விவரங்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. ஏற்கனவே, ரெட்மி 13 ப்ரோ சீரிஸ் இந்திய மார்கெட்டில் வெளியாகிவிட்டதால், இந்த போனை போக்கோ எக்ஸ்6 நியோ போனாக ரீபிராண்ட் செய்து வெளியிட போக்கோ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








