Home
Mobile

மிரளுது மார்கெட்.. வெறும் ரூ.23,000 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் வெறும் ரூ.23,000 பட்ஜெட்டுக்கு 108 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், ஓஎல்இடி டிஸ்பிளே போன்ற பக்காவான அம்சங்களுடன் போகோ எக்ஸ்6 நியோ (Poco X6 Neo) போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு மிகப்பெரும் வரவேற்பு பெற்றுவரும் ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ போனானது, இந்தியாவில் ரீபிராண்ட் செய்யப்பட்டு போகோ எக்ஸ்6 நியோ மாடலாக வெளியாக இருக்கிறது. இந்த போன் பிஐஎஸ் சான்றிதழுக்கு வந்துள்ளதால், அடுத்த சில வாரங்களில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த போனின் அம்சங்களை தெரிந்துகொள்ள ரெட்மி நோட் 12ஆம் மாடலை பார்ப்போம்.

வெறும் ரூ.23000 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. OLED டிஸ்பிளே போன்!

ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ அம்சங்களை (Redmi Note 13R Pro Specifications) பொறுத்தவரை அந்த போன் 6.67 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இதுவொரு ஓஎல்இடி டிஸ்பிளே (OLED Display) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2,160Hz PWM டிம்மிங் வருகிறது.

அதோடு 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி ப்ரோ போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 6080 6nm SoC) சிப்செட் வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மாலி - ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 1 டிக்கான மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த ரெட்மி மாடலில் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) வருகிறது. ஆகவே, எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய 108 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.23000 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. OLED டிஸ்பிளே போன்!

அதோடு 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. 16 எம்பி ஃபிரண்ட் ஃபேஸிங் கேமரா கொண்டிருக்கிறது. இந்த ரெட்மி ப்ரோ மாடலில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது.

இந்த போனின் கனெக்டிவிட்டி மற்றும் சிலாட் அம்சங்களை பொறுத்தவரையில், டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் 5ஜி எஸ்ஏ (5G SA) மற்றும் டூயல் 4ஜி (Dual 4G) வருகிறது.

மேலும், ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), டூயல் பேண்ட் வை-பை 802 (Dual Band Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகியவை வருகின்றன. டைம் ப்ளூ (Time Blue) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. கம்மியான பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், 108 எம்பி கேமரா, ஓஎல்இடி டிஸ்பிளே போன்ற பிரீமியம் அம்சங்களை கொண்டிருப்பதால், விற்பனையில் சக்கைபோடு போட்டுவருகிறது. ஆகவே, அதன் ரீபிராண்டான போகோ எக்ஸ்6 நியோ போனும் நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco X6 Neo With 108MP Camera India Launch Soon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X