Home
Mobile

மார்ச் 13 வரை.. எந்த போனும் வாங்காதீங்க.. 12GB ரேம்.. 108MP கேமரா.. வருகிறது புதிய போக்கோ போன்..

போக்கோ நிறுவனம் தனது போக்கோ எக்ஸ்6 நியோ போனின் இந்திய அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 108எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

போக்கோ எக்ஸ்6 நியோ அம்சங்கள் (POCO X6 Neo specifications): 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) வசதியுடன் போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. ஒஎல்இடி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

மார்ச் 13 வரை.. எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது புதிய போக்கோ போன்..

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6080 (MediaTek Dimensity 6080) சிப்செட் வசதியுடன் போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் 8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, 108எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும்.. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.

குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி (5000mAh battery)வசதியைக் கொண்டு வெளிவரும் போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன். இந்த போக்கோ ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (33W fast charging) வசதியும் உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

மார்ச் 13 வரை.. எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது புதிய போக்கோ போன்..

ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.

எப்போது அறிமுகம்? வரும் மார்ச் 13-ம் தேதி ( March 13) மதியம் 12 மணி அளவில் போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த போன் பிளிப்கார்ட் ( Flipkart) தளத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய போக்கோ எக்ஸ்6 நியோ ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO X6 Neo will be launched in India on March 13: check specifications, price: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X