அடுத்த வாரம்.. 108MP கேமரா.. 33W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. வருகிறது புதிய போக்கோ போன்.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை கம்மி பட்ஜெட்டில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போக்கோ நிறுவனம் விரைவில் இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது போக்கோ எக்ஸ்6 நியோ எனும் ஸ்மார்ட்போனை தான் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது போக்கோ நிறுவனம். ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த போன் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரும்.

போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே BIS சான்றிதழைப் பெற்றுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக BIS சான்றிதழ் தளத்தில் போக்கோ எக்ஸ்6 நியோ போன் ஆனது 2312FRAFDI என்ற மாடல் நம்பரைக் கொண்டுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
போக்கோ எக்ஸ்6 நியோ அம்சங்கள் ( POCO X6 Neo specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6080 (MediaTek Dimensity 6080) சிப்செட் வசதியுடன் போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போக்கோ போன் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) வசதியுடன் போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
108எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.

5000எம்ஏஎச் பேட்டரி (5000mAh battery) வசதியைக் கொண்டுள்ளது போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போக்கோ ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (33W fast charging) வசதியும் உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.
யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த போக்கோ போன்.


Click it and Unblock the Notifications








