கொஞ்சம் பொறுங்க.. 108MP கேமரா.. 33W சார்ஜிங்.. 256GB மெமரி.. வருகிறது போக்கோ போன்.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக சாம்சங் ஸ்மார்ட்போன்களை போன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் போக்கோ நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது போக்கோ எக்ஸ்6 நியோ (Poco X6 Neo) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் மார்ச் மாதம் அறிமுகம் செய்ய உள்ளது போக்கோ நிறுவனம். அதேபோல் போக்கோ எப்6 (Poco F6) எனும் ஸ்மார்ட்போனை வரும் ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது போக்கோ நிறுவனம். இந்த போக்கோ எப்6 போனின் அம்சங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் போக்கோ எக்ஸ்6 நியோ அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

போக்கோ எக்ஸ்6 நியோ (Poco X6 Neo specifications): 6.6-இன்ச் பன்ச் ஹோல் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன வெளிவரும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2160 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
அதேபோல் போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன் ஆனது சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட் (MediaTek Dimensity 6080 SoC) வசதியுடன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும் ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன். மேலும் பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), ஐஆர் பிளாஸ்டர் (IR blaster) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த போக்கோ போன்.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக 5ஜி, ஜிபிஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த போக்கோ எக்ஸ்6 நியோ போன் இந்தியாவில் ரூ.20,000 விலையில் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications