அசரவைக்கும் போக்கோ.. 108MP கேமரா.. 256GB மெமரி.. பட்ஜெட் விலையில் 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனம் தனது போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 108எம்பி கேமரா, ஐபி54 ரேட்டிங், அமோலெட் டிஸ்பிளே மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். இப்போது இந்த போனின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களைப் பார்க்கலாம்.
போக்கோ எக்ஸ்6 நியோ அம்சங்கள் (Poco X6 Neo specifications): 6.67-இன்ச் பன்ச் ஹோல் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் போக்கோ எக்ஸ்6 நியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1920Hz PWM டிம்மிங், 2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் (2160Hz instant touch sampling rate), 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6080 (MediaTek Dimensity 6080) சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் 2 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 4 வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும்.
108எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போக்கோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமராவில் 3X இன்-சென்சார் ஜூம் ஆதரவு (3x in-sensor zoom support) உள்ளது. அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது.

குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ( 33W fast charging) வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன் ஆனது நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.
அதேபோல் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. அதேபோல் IP54 தர ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் வசதி கொண்டுள்ளது இந்த போக்கோ போன்.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor)வசதியுடன் போக்கோ எக்ஸ்6 நியோ போன் வெளிவந்துள்ளது. மேலும் ஐஆர் பிளாஸ்டர் ஆதரவு இதில் உள்ளது. அதேபோல் 5ஜி, வைஃபை 5, புளூடூத் 5.3, ஜிஎன்எஸ்எஸ் மற்றும் யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

ஆஸ்ட்ரல் பிளாக் (Astral Black), ஹரிசோன் ப்ளூ (Horizon Blue),மார்ஸ் ஆரஞ்ச் (Mars Orange)நிறங்களில் போக்கோ எக்ஸ்6 நியோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆதரவு இந்த போனில் உள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்6 நியோ போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.17,999-ஆக உள்ளது. இன்று மாலை 7 மணி அளவில் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் போக்கோ எக்ஸ்6 நியோ போன் விற்பனைக்கு வர உள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








