Home
Mobile

அள்ளி தரும் பிளிப்கார்ட்.. ரூ.12,999 பட்ஜெட்ல 108எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. ஆஃபரில் POCO 5ஜி போன்..

பிளிப்கார்ட் தளத்தில் Big Bachat sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி இந்த சிறப்பு விற்பனையில் 108எம்பி கேமரா கொண்ட போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

அள்ளி தரும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் POCO 5ஜி போன்..

போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி அம்சங்கள் (POCO X6 Neo 5G Specifications): 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display) கொண்டுள்ளது இந்த போன். மேலும் 1080×2400 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன் (Corning Gorilla Glass 5 Protection) உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு எம்ஐயுஐ 14 (MIUI 14) மூலம் போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் உடன் போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி போன் வெளிவந்தது. மேலும் மாலி ஜி 57 எம்சி 2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் உள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன். மேலும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் மோட் (Night Mode), வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter), ஃபிலிம் ஃபில்டர்கள் (Film Filters), 3x இன்-சென்சார் ஜூமிங் உள்ளிட்ட கேமரா அம்சங்களும் இதில் உள்ளன.

அள்ளி தரும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் POCO 5ஜி போன்..

அதேபோல செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி மாடல். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5000mAh பேட்டரி உடன் போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் இன்பிராரெட் மற்றும் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் போன்ற அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அஸ்ட்ரல் பிளாக், ஹொரைசன் ப்ளூ மற்றும் மார்ஷியன் ஆரஞ்ச் ஆகிய நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco X6 Neo 5G with 8GB RAM price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X