வெளுத்துக் கட்டும் அமேசான்.. 108MP கேமரா.. 33W சார்ஜிங்.. ஆஃபரில் Poco 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் (amazon) தளத்தில் போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி (POCO X6 Neo 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 108எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி போனுக்கு 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1299 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.11700 விலையில் வாங்கிவிட முடியும்.

போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி அம்சங்கள் (POCO X6 Neo 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் உடன் போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி வெளிவந்தது. மேலும் இதில் மாலி ஜி 57 எம்சி 2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் உள்ளது.
அதேபோல் 108 எம்பி ப்ரோ கிரேடு மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் மோட் (Night Mode), வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter), ஃபிலிம் ஃபில்டர்கள் (Film Filters), 3x இன்-சென்சார் ஜூமிங் போன்ற கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி மாடல். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு இதில் உள்ளது.
6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display) உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080×2400 பிக்சல்கள், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் ரேட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போன் சிந்த திரை அனுபவம் கொடுக்கும்.
இதுதவிர 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன் (Corning Gorilla Glass 5 Protection) போன்ற சிறப்பான அம்சங்களும் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. அதேபோல் எம்ஐயுஐ 14 (MIUI 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13 ) இயங்குதளத்தை
அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
குறிப்பாக 5000mAh பேட்டரி உடன் போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் இன்பிராரெட் மற்றும் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வசதி இதில் உள்ளது. அஸ்ட்ரல் பிளாக், ஹொரைசன் ப்ளூ மற்றும் மார்ஷியன் ஆரஞ்ச் ஆகிய நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








