Home
Mobile

Amazon அதிரடி.. ரூ.11700 பட்ஜெட்ல 108எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. ஆஃபரில் போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?

தற்போது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் 2024 (Amazon Great Indian Festival Sale 2024) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி (POCO X6 Neo 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1299 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.11700 விலையில் வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon அதிரடி.. ஆஃபரில் போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி அம்சங்கள் (POCO X6 Neo 5G Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் மாலி ஜி 57 எம்சி 2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் (1080×2400 பிக்சல்கள்) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இதுதவிர பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதன்படி 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன் (Corning Gorilla Glass 5 Protection) போன்ற சிறப்பான அம்சங்களும் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.குறிப்பாக இதில் மிட்-பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு எம்ஐயுஐ 14 (MIUI 14) மூலம் இயங்குகிறது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 108 எம்பி ப்ரோ கிரேடு மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன். போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் மோட் (Night Mode), வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter), ஃபிலிம் ஃபில்டர்கள் (Film Filters), 3x இன்-சென்சார் ஜூமிங்உள்ளிட்ட கேமரா அம்சங்கள் உள்ளன.

Amazon அதிரடி.. ஆஃபரில் போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி மாடல். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு இதில் உள்ளது.

இந்த போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி போன் 5000mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் இன்பிராரெட் மற்றும் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வசதி இதில் உள்ளது. அதேபோல் அஸ்ட்ரல் பிளாக், ஹொரைசன் ப்ளூ மற்றும் மார்ஷியன் ஆரஞ்ச் ஆகிய நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் கம்மி விலையில் இந்த போன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

photo credit: financialexpress.com

Best Mobiles in India

English summary
POCO X6 Neo 5G available at 35 percent off Amazon Great Indian Festival sale: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X