Home
Mobile

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. 200எம்பி கேமரா.. 512ஜிபி மெமரி.. வருகிறது புதிய போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனம் இந்த மாதம் தொடக்கத்தில் உலக சந்தையில் போக்கோ எக்ஸ்6 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் போக்கோ நிறுவனம் விரைவில் போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போன் தான் உலக சந்தையில் போக்கோ எக்ஸ்6 5ஜி எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த போக்போ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

200எம்பி கேமரா.. 512ஜிபி மெமரி.. வருகிறது புதிய போக்கோ 5ஜி போன்..

போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1220 x 2712 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.

200எம்பி கேமரா.. 512ஜிபி மெமரி.. வருகிறது புதிய போக்கோ 5ஜி போன்..

போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

போக்கோ எக்ஸ்6 5ஜி 200எம்பி மெயின் ரியர் கேமரா உடன் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2எம்பி டெப்த் கேமரா வசதியும் இதில் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5100 எம்ஏஎச் பேட்டரியுடன் போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Poco X6 5G may be launched in the global market soon: check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X