Home
Mobile

சும்மா படம் காட்டலாம்.. 200MP கேமரா.. 67W சார்ஜிங்.. 16GB ரேம்.. மிரட்டும் போக்கோ போன்.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எக்ஸ்6 5ஜி (POCO X6 5G) ஸ்மார்ட்போனை உலக சந்தை மற்றும் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது சமீபத்தில் IMDA மற்றும் BIS சான்றிதழ் தளங்களில் காணப்பட்டது. எனவே வரும் வாரங்களில் இந்த புதிய போக்கோ போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

அதேபோல் BIS சான்றிதழ் தளத்தில் 23122PCD1I என்ற மாடல் நம்பரை பெற்றுள்ளது இந்த போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் போக்கோ எக்ஸ்6 5ஜி எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சும்மா படம் காட்டலாம்.. 200MP கேமரா.. மிரட்டும் போக்கோ போன்..

தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 ( Qualcomm Snapdragon 7s Gen 2) சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ( Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனின் எடை மிகவும் குறைவு என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் போக்கோ எக்ஸ்6 5ஜி விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட 200எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

சும்மா படம் காட்டலாம்.. 200MP கேமரா.. மிரட்டும் போக்கோ போன்..

5100 எம்ஏஎச் பேட்டரியுடன் போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ( 67W fast charging) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போக்கோ எக்ஸ்6 5ஜி போன் ஆனது தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO X6 5G India launch soon, spotted on BIS: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X