போட்றா ஆர்டரை! ரூ.15999-க்கு.. 5G, 67W சார்ஜிங், 5000mAh பேட்டரி, 64MP கேம், 120Hz டிஸ்பிளே.. வேற என்ன வேணும்!
ரூ.10,000 க்குள் அறிமுகமாகும் எல்லா ஸ்மார்ட்போன்களும் இந்தியர்கள் மத்தியில் வரவேற்பை பெறுகிறதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஏனென்றால் மேற்குறிப்பிட்ட பட்ஜெட்டில் வரும் 99% ஸ்மார்ட்போன்கள் இன்னமும் 4ஜி ஆதரவுடனே வருகின்றன. ரூ.10,000-ஐ ஒட்டிய பட்ஜெட்டில் வெளியாகும் 5ஜி போன்கள், எதிர்பார்த்த அளவிலான மற்ற அம்சங்களை கொண்டிருப்பதில்லை!
இந்த "இடியாப்ப" சிக்கலை தீர்ப்பதற்காக, வருகிற ஜனவரி 11 ஆம் தேதியன்று 2 புதிய போக்கோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அவைகளின் விலை நிர்ணயம் என்ன? அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

அதென்ன ஸ்மார்ட்போன்கள்? ஜனவரி 11 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படபோவது போக்கோ எக்ஸ்6 சீரிஸ் (POCO X6 Series) ஸ்மார்ட்போன்கள் தான். இந்த சீரிஸின் கீழ் போக்கோ எக்ஸ்6 5ஜி (POCO X6 5G) மற்றும் போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி (POCO X6 Pro 5G) என 2 மாடல்கள் அறிமுகமாகும்.
எப்போது முதல் விற்பனை? கடந்த சில நாட்களாக கூடிய விரைவில் அறிமுகமாகும் என்று டீஸ் செய்யப்பட்டு வந்த இவ்விரு ஸ்மார்ட்போன்களும் வருகிற ஜனவரி 11 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்றும், இரண்டுமே பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் வழியாக விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான விற்பனை தேதி அறிமுக தினத்தன்று அறிவிக்கப்படும்.

என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? போக்கோ எக்ஸ்6 மாடலானது LPDDR5 RAM மற்றும் UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 SoC) மூலம் இயக்கப்படலாம். இது ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை பேக் செய்யலாம். அதில் 64எம்பி மெயின் சென்சார், அல்ட்ரா-வைட் லென்ஸுடன் கூடிய 13எம்பி சென்சார் மற்றும் 2எம்பி ஷூட்டர் ஆகியவைகள் இடம்பெறலாம்.
மறுகையில் உள்ள போக்கோ எக்ஸ்6 ப்ரோ மாடலானது மீடியாடெக் டைமன்சிட்டி 8300 அல்ட்ரா (MediaTek Dimensity 8300 Ultra) சிப்செட்டை பேக் செய்யலாம். இது 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரலாம். மேலும் இது 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் AMOLED 1.5K LTPS டிஸ்பிளேவையும் கொண்டிருக்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்6 ப்ரோ மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் இடம்பெறலாம். அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 64எம்பி மெயின் சென்சார், அல்ட்ராவைட் லென்ஸுடன் இணைக்கப்பட்ட 8எம்பி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவைகள் இடம்பெறலாம். கடைசியாக இது 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.
என்ன விலைக்கு வரும்? போக்கோ எக்ஸ்6 சீரிஸின் வெண்ணிலா மாடலானது பிளாக், க்ரே மற்றும் யெல்லோ கலர் ஆப்ஷன்களிலும், ப்ரோ மாடலானது பிளாக், ப்ளூ மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலையை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்6 ரூ.15,999 க்கும், போக்கோ எக்ஸ்6 ப்ரோ ரூ.22,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.
ஜனவரி 4-ல் அறிமுகமாகும் ரெட்மி நோட் 13 சீரீஸ்: போக்கோ எக்ஸ்6 சீரீஸுக்கு முன்பாக ஜனவரி 4 ஆம் தேதியே ரெட்மியின் புதிய நோட் 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாக உள்ளன. இதன் கீழ் ரெட்மி நோட் 13, ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும்.
எதிர்பார்க்கப்படும் விலைகளை பொறுத்தவரை ரெட்மி நோட் 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.20,999 க்கும் ரெட்மி நோட் 13 ப்ரோவின் பேஸிக் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.28,999 க்கும், ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸின் பேஸிக் 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.33,999 க்கும் அறிமுகமாகலாம்.
அதே நாளில் அறிமுகமாகும் 2 விவோ ஸ்மார்ட்போன்கள்: ரெட்மி நோட் 13 சீரிஸ் அறிமுகமாகும் அதே ஜனவரி 4 ஆம் தேதியன்று விவோ எக்ஸ்100 சீரீஸ் (Vivo X100 Series) ஸ்மார்ட்போன்களும் கூட இந்தியாவில் அறிமுகம் ஆகின்றன. விவோ எக்ஸ்100-ன் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.63,999 க்கும், எக்ஸ்100 ப்ரோவின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.89,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








