பிளிப்கார்ட் பிச்சிக்குது.. பட்ஜெட்ல 108MP கேமரா.. 67W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் அசத்தலான டிஸ்கவுண்ட்டில் பக்கா பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், 108எம்பி கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மிட்-ரேஞ்ச் அம்சங்களுடன் மிகவும் கம்மியான விலைக்கு போக்கோ எக்ஸ் 5 ப்ரோ (POCO X5 Pro) போன் கிடைக்கிறது.
போக்கோ எக்ஸ் 5 ப்ரோ அம்சங்கள் (POCO X5 Pro Specifications): இந்த போக்கோ போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி 6என்எம் (Octa Core Snapdragon 778G 6nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 642எல் ஜிபியு (Adreno 642L GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு ஆண்ட்ராய்டு 12 (Android 12) மற்றும் எம்ஐயுஐ 14 (MIUI 14) ஓஎஸ் வருகிறது.

இந்த போக்கோ போனில் 6.67 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு 1920Hz PWM டிம்மிங், டிசிஐ-பி3 கலர் காமட், 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன் மற்றும் எச்டிஆர்10 பிளஸ் சப்போர்ட் வருகிறது.
இந்த டிஸ்பிளேவானது, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொண்டுள்ளது. இந்த மாடலில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என்று 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போக்கோ ப்ரோ மாடலில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் வருகிறது. ஆகவே, சாம்சங் ஐசோசெல் (Samsung ISOCELL) சென்சாருடன் 108 எம்பி மெயின் கேமரா வருகிறது.
அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா+ 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போக்கோ மாடலில் சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் இன்பிராரெட் சென்சார் வருகிறது. அதோடு IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் உள்ளது. இந்த போன், போக்கோ யெல்லோ (POCO Yellow), ஹரிசோன் ப்ளூ (Horizon Blue) மற்றும் ஏஸ்ட்ரல் பிளாக் (Astral Black) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS) மற்றும் வை-பை 802 (Wi-Fi 6 802) ஆகியவை வருகின்றன. இந்த போக்கோ போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,499 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலி விலை ரூ.19,499 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த விலையில் பிளிப்கார்ட் (Flipkart) விற்பனையில் பட்டையை கிளப்பும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 6 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.1000 தள்ளுபடியும், 8 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.1000 தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
ஆகவே, இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை ரூ.17,499க்கு வாங்கிக்கொள்ள முடியும். மிகவும் கம்மியான பட்ஜெட்டில் 108 எம்பி கேமரா கொண்ட 5ஜி போன்கள் வரிசையில் இந்த போக்கோ எக்ஸ் 5 ப்ரோ போன் முன்னணியில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








