Home
Mobile

பட்ஜெட் விலையில் புதிய 5G போக்கோ போனை வாங்க ரெடியா? இன்னும் 2 வாரம் வெயிட் பண்ணுங்க.!

மிகவும் அதிகம் எதிர்பார்த்த போக்கோ எக்ஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இந்த மாதம் இறுதியில் இந்த போக்கோ எக்ஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் ட்ரிபிள் ரியர் கேமரா, அசத்தலான சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும்.

போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி
குறிப்பாக இந்த போக்கோ எக்ஸ்5 ப்ரோ ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த போக்கோ எக்ஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

பட்ஜெட் விலையில் புதிய 5G போக்கோ போனை வாங்க ரெடியா?

போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதியுடன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதேபோல் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். இதுதவிர இந்த ஸ்னாப்டிராகன்சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும்.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 1080 பிக்சலஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி முக்கிய அம்சங்கள்
போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், 108எம்பி ட்ரிபிளர் ரியர் கேமரா ஆதரவு, 16எம்பி செல்பி கேமரா, 12ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ ஸ்மார்ட்போன். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி
போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம், கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் புதிய 5G போக்கோ போனை வாங்க ரெடியா?

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 619 ஜிபியு வசதியும் உள்ளது. பின்பு MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன். போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டபல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி Samsung ISOCELL GW3 பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO X5 Pro smartphone will be launched in India later this month: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X